fbpx

கோபம் அதிகமாக வருகிறதா.? கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்.!?

கோபம் என்பது அனைவருக்கும் இருக்கும் சாதாரண குணம் ஆகும். ஆனால் ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக சிறிய விஷயங்களிற்கு இருக்கு கூட கோபப்படுவார்கள். ஒரு சிலர் கோபத்தில் பொருட்களை தூக்கி உடைப்பது பிறரை காயப்படுத்துவது போன்ற செயல்களை செய்வார்கள். இவ்வாறு அளவுக்கு அதிகமாக கோபப்படுபவர்கள் ஒரு சில உணவு பழக்கங்களின் மூலம் கோபத்தை கட்டுப்படுத்தலாம்.

1.  டார்க் சாக்லேட் –  இதை அடிக்கடி உண்பதன் மூலம் எதிர்மறையான மனநிலை உருவாவதை தடுத்து மனநிலையை சீராக்குகிறது.
2. கிரீன் டீ – இதில் இருக்கும் ஒரு வகையான வேதிப்பொருள் கவன சிதறல்களை ஏற்படுத்தாமல் மூளையின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.
3. நட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் – இதில் புரதச்சத்து, அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகமாக இருப்பதால் இவை உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உருவாக காரணமாக உள்ளது.
4. வேக வைத்த முட்டைகள் –  மூளையில் முக்கிய செல்களை சோலின் என்ற வேதிப்பொருள் கட்டுப்படுத்துகிறது. இந்த வேதிப்பொருள் முட்டையில் அதிகமாக காணப்படுகிறது. எனவே முட்டையை உண்பதன் மூலம் கோபத்தையும் கட்டுப்படுத்தலாம்.
5. கீரைகள் மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கு –  பொறுமையாகவும் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பவர்கள் கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் வேக வைத்த உருளைக்கிழங்கில் காணப்படும் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் புரதச்சத்து மனப்பதட்டம் மற்றும் மனச்சிதைவு போன்ற நோய்களிலிருந்து பாதுகாத்து கோபத்தையும் குறைக்கிறது.

Rupa

Next Post

இப்படி ஒரு திட்டமா...? பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.4,000 உதவித்தொகை...! எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா...?

Sat Jan 13 , 2024
அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை […]

You May Like