fbpx

அதிக இனிப்பு சாப்பிடுபவரா நீங்கள்..? என்னென்ன பிரச்சனைகள் காத்திருக்கு தெரியுமா..? கட்டுப்படுத்துவது எப்படி..?

நமது அன்றாட உணவில் மற்ற சுவைகளை விட இனிப்பு அதிகம் உள்ளது. இதனால் இனிப்பு சுவையை நமது நாக்கு அதிகம் விரும்பும். ஆனால், அறுசுவைகளில் மிகவும் பாதிப்பானது இந்த இனிப்பு சுவை தான். அதுவும் சர்க்கரை போன்ற இனிப்புகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடலில் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக சர்க்கரை நோய், உடல் வீக்கம், புற்றுநோய், செரிமான கோளாறுகள், உடல் பருமன், வயதான தோற்றம், உறுப்புகள் மெதுவாக வேலை செய்தல் போன்ற முக்கிய பாதிப்புகள் சர்க்கரையினால் உண்டாகுகிறது.

ஆகையால், இனிப்பு மீதான ஆர்வைத்தை எப்படி குறைப்பது என்பதை தற்போது பார்க்கலாம். பலர் இனிப்பின் மீதான ஆசை காரணமாகவே சாக்லேட், இனிப்பு பண்டங்களை அதிகமாக சாப்பிடுகின்றனர். இது எதிர்காலத்தில் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சில பழங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இனிப்பு மீதான மோகத்தை கட்டுப்படுத்த உதவும். குறிப்பாக, அவகடோ பழத்தில் இனிப்பு குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் மிகுதியாகவும் உள்ளது.

மேலும், ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சர்க்கரை, மாவுச்சத்து கிடைக்கிறது. ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பழங்கள் புளிப்பு சுவை அளித்து சர்க்கரையை கட்டுப்படுத்தும். ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி உள்ளிட்ட பழ வகைகள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகின்றன. கிவி பழத்தில் குறைவான சர்க்கரையும் நிறைவான விட்டமின் கே, விட்டமின் சி-யும் உள்ளது.

Chella

Next Post

BEL Recruitment 2023: பொறியியல் உதவியாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு…! விண்ணப்பிப்பது எப்படி..?

Thu Aug 17 , 2023
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) இந்தியா நிறுவனத்தில், இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி, டெக்னீசியன் ‘சி’ மற்றும் ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை இன்று அதாவது ஆகஸ்ட் 16 முதல் தொடங்கியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 05 செப்டம்பர் 2023 வரை. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டின் இந்த ஆட்சேர்ப்பு இயக்கம், […]

You May Like