fbpx

இந்த இடத்தில் மச்சம் இருக்கும் பெண்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு அதிர்ஷ்டம் தான்.!?

ஜோதிட சாஸ்திரத்தின்படி உடலில் இருக்கும் மச்சங்களை வைத்து அதன் பலன்களை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். பொதுவாக நம் உடலில் இருக்கும் மச்சங்களின் அடிப்படையில் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பணவரவு, சொத்து சேர்க்கை, பதவி உயர்வு, ஆடம்பர வாழ்க்கை என்று பல நன்மைகள் ஏற்படும்.

ஆனால் ஒரு சிலருக்கு மச்சங்கள் அப்படியே வாழ்வில் எதிர்பாராத பல தடைகளை ஏற்படுத்தும். பிறக்கும்போதே ஒரு சிலருக்கு உடலில் மச்சங்கள் இருக்கும். இந்த மச்சங்கள் எப்போதும் மறையாது என்பதால் இதை அடையாளமாகவும் கருதி வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு ஒரு சில இடத்தில் இருக்கும் மச்சங்கள் அவர்களின் வாழ்க்கை துணைக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இதைக் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

1. பெண்களுக்கு புருவத்தில் மச்சம் இருந்தால் இவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாமல் சிக்கனமாய் வாழபவர்களாக இருப்பார்கள்.
2. நெற்றியில் வலது புறத்தில் மச்சம் இருந்தால் தைரியம், எதையும் தெளிவாக பேசும் குணமுடையவர்களாக இருப்பார்கள்.
3. வலது கண்ணில் மச்சம் இருந்தால் கர்வம் இல்லாமல் அடக்கமான குணமுடையவர்களாக இருப்பார்கள்.
4. இடது கண்ணில் மச்சம் இருந்தால் கடின உழைப்பாளியாகவும், வாழ்க்கை துணையின் உழைப்பிற்கு ஊக்கமளிப்பவர்களாக இருப்பார்கள்.
5. மூக்கின் மேல் மச்சம் இருந்தால் மிகவும் பொறுமைசாலிகளாக இருப்பார்கள்.
6. இடது கழுத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.
7. இடது தோளில் மச்சம் இருந்தால் குடும்பத்தை சிறப்பாக நிர்வாகம் செய்பவர்களாக இருப்பார்கள்.
8. இடது மற்றும் வலது மார்பகங்களில் மச்சம் இருந்தால் செல்வாக்கு நிறைந்தவர்களாகவும், நற்குணம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.
9. மார்பகங்களுக்கு மேலே மச்சம் இருப்பவர்கள் பணக்கஷ்டம் ஏற்பட்டாலும், குடும்பத்தை மகிழ்ச்சியாக கொண்டு செல்வார்கள்.
10. வலது பாதத்தில் மச்சம் இருந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.
மேலே குறிப்பிட்ட இடங்களில் மச்சம் இருக்கும் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக தான் இருப்பார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

Baskar

Next Post

பிரிந்த கணவன், மனைவியை இணைய வைக்கும் திருக்கோயில்.! எங்கு உள்ளது.!?

Thu Mar 7 , 2024
அரியலூரில் அமைந்துள்ள ஶ்ரீ ஆலந்துறையார் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்து வருகிறது. 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருகோயிலாக இருந்து வரும் இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் விழா நடைபெறுவது வழக்கம். மேலும் இக்கோயிலில் அமைந்துள்ள லிங்கம் சிலை மிகவும் சிறியதாக இருக்கும். இதனால் லிங்கத்தின் மீது குவளை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கம் மற்றும் குவளைக்கு தினமும் சாம்பிராணி தைலம் பூசப்பட்டு வருகிறது. பரசுராமர் […]

You May Like