fbpx

வீட்டு வாசலில் வங்கி சேவை..!! போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் ஈஸியா கடன் பெறலாம்..!! இதை மட்டும் பண்ணுங்க..!!

போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கடன் வசதி, வீட்டு வாசலில் வங்கிச்சேவை உட்பட பல்வேறு வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஏராளமான கிராமப்புற மக்கள் போஸ்ட் ஆபிஸில் கணக்கு துவங்கி அவர்களால் முடிந்த தொகையை முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெறுகின்றனர். மக்களின் வசதிக்கேற்றவாறு போஸ்ட் ஆபிஸிலும் பல சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது போஸ்ட் ஆபிஸ் பிரீமியம் சேமிப்புக் கணக்கின் மூலம் தன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பலன்களை அளித்து வருகிறது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கடன் வசதி, வீட்டு வாசலில் வங்கிச்சேவை உட்பட பல்வேறு வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வீட்டு வாசலில் வங்கி சேவை..!! போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் ஈஸியா கடன் பெறலாம்..!! இதை மட்டும் பண்ணுங்க..!!

இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளவோ, டெபாசிட் செய்யவோ முடியும். இந்த திட்டம் பிற வங்கிகளைப் போன்றே உங்களுக்கு வீட்டிலிருந்தபடி பல்வேறு சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. இத்திட்டத்தில் நீங்கள் கடன் உதவியும் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் அனைத்து வித கட்டணத்திற்கு கேஷ்பேக் கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தில் பங்களிப்பதன் மூலம் டெபிட் கார்டுகளும் வழங்கப்படுகிறது. போஸ்ட் ஆபிஸில் இந்த சேமிப்பு கணக்கை 10 வயதுக்கு மேற்பட்டோர் திறந்துக்கொள்ளலாம். அவ்வாறு கணக்கை துவங்கும்போது ரூ.149 ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மேலும், ஆண்டுதோறும் ரூ.99 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கணக்கை திறக்கையில் நீங்கள் ரூ. 200 டெபாசிட் செய்ய வேண்டியது அவசியம். இந்த திட்டத்தில் சேருவதற்கு நீங்கள் கேஒய்சி செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Chella

Next Post

9 வயது குழந்தையை சீரழித்த முதியவர் ஆப்பு வைத்த நீதிமன்றம்

Wed Dec 28 , 2022
அரியலூர் மாவட்டம் விக்ரம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் என்கிற கருணாநிதி (54) இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவர் கடந்த மாதம் ஜூலை 8 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையே அந்த முதியவர் பலமுறை சிறுமியிடம் லாபகமாக பேசி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் கூறி உள்ளார். அதனால் பயந்து போன அந்த சிறுமி யாரிடமும் […]

You May Like