fbpx

நீங்கள் தினமும் குடிக்கும் தேநீரில் இந்த பொருளை மட்டும் சேர்த்து குடித்து பாருங்கள்.!?

பொதுவாக நம்மில் பலருக்கும் டீ, காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். பலருக்கும் காபியை விட தேநீர் குடிப்பது என்பது மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. டீ என்று கேட்டாலே டீ பிரியர்களுக்கு மனதில் உற்சாகம் பொங்கும். மேலும் டீ பிரியர்களுக்கு குளிர்காலத்திலும் சரி, வெயில் காலத்திலும் சரி டீ குடிப்பது எப்போதுமே சலிப்பை ஏற்படுத்தாது.

ஆனால் தேநீரை அதிக அளவு எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றன. இதற்கு பதிலாக தேநீரில் ஒரு சில பொருட்களை சேர்த்து குடித்து வந்தால் இது குளிர்காலத்திலும், வெயில் காலத்திலும் சாதாரணமாக ஏற்படும் நோய் தொற்றான சளி, இருமல் போன்ற தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. என்னென்ன பொருட்களை சேர்த்து குடிக்கலாம் என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?

1. கருப்பு மிளகில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இதை தேநீரில் கலந்து குடிக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்ச செய்கிறது.
2. இஞ்சியில் ஆக்சிஜனேற்றம் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், உடலில் நோயை ஏற்படுத்தும் கிருமிகள் மற்றும் அலர்ஜிகளை சரி செய்து சுவாச பாதையில் சீராக செயல்பட உதவுகிறது. வாந்தி பேதி, அஜீரணம், வாயு பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சி தேநீர் குடித்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.
3. தேநீரில் சுவாசத்தையும், மனத்தையும் தரும் ஏலக்காயில் வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் மூச்சுத் திணறல், இருமல், மார்பில் சளி, ஆஸ்துமா போன்ற நோய்களை சரிப்படுத்துகிறது.
4. கிராம்பில் கார்போஹைட்ரேட், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், ஹைட்ரோ குளோரிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, யூஜெனால் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதை தேநீரில் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
5. பட்டையில் இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீசு, குரோமியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. சாதாரண தேயிலையில் தேநீர் குடிப்பதை விட மேலே குறிப்பிட்ட பொருட்களில் தேநீர் குடித்து வந்தால் உடலுக்கு ஏற்படும் நோயை கட்டுப்படுத்தி பல்வேறு நன்மைகள் ஏற்படும்.

Rupa

Next Post

நரம்பு தளர்ச்சி முதல் ஆண்மை குறைபாடு வரை சரி செய்யும் முருங்கையின் அற்புத பலன்கள்.!?

Fri Mar 8 , 2024
பொதுவாக காய்கறிகளில் முருங்கைக்காய் என்பது மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த காயாக கருதப்பட்டு வருகிறது. நம் முன்னோர்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் உயிர் வாழ்ந்ததற்கு முருங்கைக்காயும், முருங்கைக் கீரையும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. “முருங்கையை நொறுங்க தின்றால் முன்னூறும் போகும்” என்பது நம் முன்னோர்களின் பழமொழி. இதற்கேற்றார் போல் முருங்கை காய் மற்றும் கீரையை நன்றாக கடித்து சாப்பிடும் போது 300 வகையான நோய்களும் நம் […]

You May Like