பெரும்பாலான கார்களின் இன்ஜின் முன் பக்கம் தான் இருக்கிறது. காரின் மையப்பகுதியிலோ பின் பகுதியிலோ பொருத்தப்படுவதில்லை. இது ஏன் என்று தெரியுமா..? இதற்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன? இது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இயங்கி வரும் பெரும்பாலான கார்களின் இன்ஜின் (Car Engine) முன் பகுதியில் தான் இருக்கிறது. வெகு சில கார்களின் மட்டுமே மையப் பகுதியிலோ அல்லது காரின் பின்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குச் செல்லும் கார்களில் பெரும்பாலும் முன்பகுதியில் தான் இன்ஜின் பொருத்தப்படுகிறது. காரின் முன் பகுதியில் இன்ஜின் பொருத்தப்படுவதற்கு சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.
காரின் இன்ஜின் அதன் முன்பக்க ஆக்ஸிலில் பொருத்தப்படுவதால் இருக்கும் முக்கியமான பலன் இந்த கார் அண்டர்ஸ்டியர் ஆகாது. அதாவது கார் வேகமாகச் செல்லும்போது காரின் ஸ்டியரிங்கை திருப்பினால் வீல் உடனடியாக திரும்பும், அதிக எடை இருப்பதால் இது சாத்தியமாகிறது. முன்பக்கம் இன்ஜினை வைத்து விட்டால் பின்பக்கம் பொருட்களை ஏற்றி செல்ல அதிக இடம் கிடைக்கும். இதுவும் காரின் இஞ்சினை முன்பக்கம் வைக்க முக்கியமான காரணம் தான். முன் வீல் டிரைவ் கார்களில் இஞ்சின் முன் பக்கமே இருந்தால் தேவையில்லாத பல மெக்கானிக்கல் பாகங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
அதே நேரம் இஞ்ஜினை கூல் செய்ய கார் முன்னோக்கிச் செல்லும்போது முதலில் இன்ஜின் இருந்தால் காற்றை நேரடியாக இன்ஜினை கூல் செய்ய உள்ளே ஏர் இன் டேக்கரை வைத்து அனுப்பி விட முடியும். இதனால், இன்ஜின் விரைவில் கூல் ஆகிவிடும். அதே நேரம் இன்ஜின் முன்னால் இருந்தால் தான் அதை ரிப்பேர் செய்யவும் பராமரிக்கவும் எளிதாக இருக்கும். அதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக பார்க்கவும் வசதியாக இருக்கும். பின்னால் அல்லது நடுவிலிருந்தால் இன்ஜின் மறைவாக இருக்கும் அதைச் சுலபமாக ஆக்சஸ் செய்ய முடியாது. இன்ஜினை பார்க்கவே பல மூடிகளை கழட்ட வேண்டியது இருக்கும். இன்ஜினை குளிர்விப்பதும் சாதாரணமாக விஷயமாக இருக்காது.
இதையெல்லாம் விட முக்கியமான காரணம் இந்த கார் நேரடியாக ஏதாவது பொருட்கள் அல்லது மற்ற கார் மீது மோதினால் அதன் பெரும்பாலான இம்பேக்ட்டை காரின் இன்ஜின் வாங்கிக் கொள்ளும். இந்த காரணங்களால் தான் பெரும்பாலான கார்களில் முன்பக்கம் இன்ஜின் பொருத்தப்படுகின்றன. அதேநேரம் சில கார்களில் மத்தியிலும் இன்ஜின் பொருத்தப்படுகிறது. அதாவது டிரைவர் சீட்டுக்கு பின்புறம் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இவ்வாறான கார்களில் 2 சீட்டுகள் மட்டுமே இருக்கும் பின்பக்கம் இருக்க வேண்டிய சீட்டுகள் இருக்காது. இந்தியாவில் விற்பனையாகும் ஆடி, பிஎம்டபிள்யூ,, லம்போகினி, அவன்டேட்டர் போன்ற கார்கள் மத்தியில்தான் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வெகு சில கார்களில் தான் பின்பக்கம் இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கும் தற்போது போர்ஷன் 911 கார்களில் தான் இன்ஜின் பின்பக்கம் பொருத்தப்படுகிறது. முன்னர் டாடா நேனோ காரில் இன்ஜின் பின்பக்கம் தான் இருந்தது. ஆனால் இப்பொழுது அந்த கார் தயாரிப்பில் இல்லை பொதுவாக இன்ஜினியரிங் முழு திறனையும் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த பாரின் பின்புறம் தான் பொருத்தப்பட வேண்டும். ஆம்னி மாருதி, ஈகோ போன்ற கார்களில் தற்போது இன்ஜின் காரின் அடிபாகத்தில் பொருத்தப்படுகிறது. இது பெரும்பாலும் பின்பகுதியில் இருக்கும் படி தான் பொருத்தப்படுகிறது. இதுவும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதுதான். கார்களின் பாதுகாப்பிற்கு காரின் முன் பகுதியில் இன்ஜின்களை பொருத்தினால் தான் சிறப்பு.
Read More : தமிழக ரேஷன் கடையில் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!