fbpx

அடடே..!! கிராம்பு டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளை பெறலாமா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

உணவுக்கு மனமும், சுவையும் தரக்கூடிய மசாலா பொருட்கள் இன்றி இந்திய சமையல் இருக்காது. சமையலில் பயன்படுத்தக் கூடிய ஒவ்வொரு மசாலா பொருளும் உணவுக்கு நல்ல மனம் கொடுப்பதோடு, மருத்துவ ரீதியான பலன்களையும் தருகிறது. அந்த வகையில், லவங்கம் என்னும் கிராம்புகளை நாம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கிராம்பு டீ தயாரிப்பது எப்படி..?

கிராம்பை உணவில் சேர்க்க இயலாதவர்கள் இதனை டீ-யாக தயார் செய்து அருந்தலாம். இரண்டு கப் தண்ணீரில் 2 அல்லது 3 கிராம்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அது ஒரு கப் அளவுக்கு வற்றி வந்தவுடன் இறக்கி ஆற வைத்து, அதில் தேன் கலந்து சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒருமுறைக்கு மேல் இந்த டீ அருந்த வேண்டாம்

கிராம்பு டீ அருந்துவதால் 11 வகையான பலன்களை நீங்கள் பெறலாம். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்…

* லவங்கத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் இருக்கின்றன. இவை நம் உடலில் உள்ள நச்சுக்களை எதிர்த்துப் போராடும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

* ஆண்டிசெப்டிக், ஆண்டிவைரல் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான பண்புகள் இதில் உள்ளன. இதனால் தொற்றுகள், சளி, இருமல் போன்றவற்றை விரட்டியடிக்கலாம்.

* செரிமானத் திறனை மேம்படுத்துவதற்கு கிராம்பு டீ உதவியாக அமையும். உணவு ஆரோக்கியமாக செரிமானம் ஆகும் பட்சத்தில் உங்கள் உடல் எடையை எளிமையாக குறையும்.

* நம் உடலின் மெட்டபாலிச விகிதத்தை கிராம்பு டீ மேம்படுத்தக் கூடியது. இதுவும் உடல் எடை குறைப்புக்கு உதவும்.

* பற்கள் அல்லது ஈறுகளில் வலி இருந்தால், கிராம்பு அதற்கு நிவாரணமாக அமையும். இதில் அழற்சிக்கு எதிரான பண்புகள் உள்ளதால் ஈறுகளில் உள்ள வீக்கத்தை குறைத்து பல் வலியில் இருந்து நிவாரணம் தருகிறது.

* சைனஸ் பிரச்சனையால் அவதி அடைபவர்களுக்கு இது ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது.

* விட்டமின் இ, விட்டமின் கே போன்ற சத்துக்கள் இருப்பதால் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக இதைப் பயன்படுத்தலாம். அத்துடன் உடல் உஷ்ணத்தை குறைக்கக் கூடியது.

* நம் உடலிலும், சருமத்திலும் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த விஷயங்களை கிராம்பு வெளியேற்றிவிடும்.

* புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் லவங்கத்தில் உள்ளன. அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி கிராம்பு டீ அருந்தலாம்.

* கிராம்பு டீ-யை ஆற வைத்து குளிர்ச்சியாக அருந்தினால் நாள்பட்ட முழங்கால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

* கிராம்பு டீ அருந்தினால் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் அளவுகள் குறையும். மேலும், உங்கள் உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் நிறையும்.

Chella

Next Post

ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்...! பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி அதிரடி கருத்து...!

Sun Jun 4 , 2023
மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என […]

You May Like