fbpx

Delete Everyone…!! இனி கவலையே வேண்டாம்..!! முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வாட்ஸ் அப்..!! பயனர்கள் நிம்மதி..!!

தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் தான் அதிகம். ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் அடிப்படையில், தற்பொழுது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் நமக்கு அளித்திருக்கிறது. நாம் தினமும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாகவோ அல்லது நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது, தவறுதலாக வேறு நபருக்கு சென்றுவிட்டால், அதை நாம் Delete Everyone என்று கொடுத்தால் அது டெலிட் ஆகிவிடும்.

Delete Everyone...!! இனி கவலையே வேண்டாம்..!! முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வாட்ஸ் அப்..!! பயனர்கள் நிம்மதி..!!

ஆனால், நாம் பதற்றத்தில் Delete Everyone கொடுப்பதற்கு பதிலாக Delete For Me என கொடுத்து விடுவோம். நாம் அனுப்பிய மெசேஜ் நமக்கு மட்டும் தான் தெரியாமல் இருக்கும். நாம் யாருக்கு டெலிட் செய்ய கொடுத்தோமே அவருக்கு அது நன்றாக தெரியும். இதை சரி செய்ய WhatsApp-ல் தற்பொழுது புதிய அப்டேட் வந்துள்ளது. அது என்னவென்றால், நாம் Delete for Me கொடுத்ததை Undo கொடுத்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதனை நாம் திரும்ப Delete For Everyone கொடுத்துக் கொள்ளலாம். Delete For Me மெசேஜ் 5 நிமிடம் Undo ஆப்ஷனில் இருக்கும். ஐந்து நொடிகளுக்குள் நாம் Undo கொடுத்து விட்டால், Delete Message திரும்ப வந்துவிடும். இந்த வசதி தற்சமயம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வைத்திருப்பவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் உள்ளது.

Chella

Next Post

குழந்தைத் தத்தெடுப்பு விதிமுறைகள் 2022....! ஆணைகளின் எண்ணிக்கை சரிவு...! முழு ங

Wed Dec 21 , 2022
கடந்த செப்டம்பர் மாதம் குழந்தைத் தத்தெடுப்பு விதிமுறைகள் குறித்த அறிவிக்கை வெளியானது முதல், நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் ஏராளமான தட்டெடுப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கைக்குப் பிறகு இதுவரை 691 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கை வெளியான நாளன்று 905 தத்தெடுப்பு ஆணைகள் நிலுவையில் இருந்தன. தற்போதைய நிலவரப்படி, நிலுவையில் உள்ள ஆணைகளின் எண்ணிக்கை 617 ஆக குறைந்துள்ளது.குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் இனி தங்களது சொந்த மாநிலங்கள்/ பகுதிகளைத் […]

You May Like