fbpx

அசைவம் சாப்பிடும்போது இந்த உணவை மட்டும் கூட சேர்த்துக்காதீங்க..!! அப்புறம் பிரச்சனை உங்களுக்குத்தான்..!!

வாய்க்கு ருசியாக உண்ணும் அசைவ உணவுடன் சுவைக்காக ஏதேதோ உணவுகளைச் சேர்த்து உண்பது இன்றைக்கு வழக்கமாகி விட்டது. அசைவ உணவுடன் எதைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது? என்று இந்த தலைமுறையினர் யாருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் அது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்…

மைதா உணவுகள்: பொதுவாகவே மைதாவுக்கு செரிமான சக்தி குறைவு. இவை எளிதில் மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு மேலும் பிரச்சனையை அதிகப்படுத்தும். அதனால், இறைச்சியோடு சேர்த்து சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல.

முள்ளங்கி : வேகவைத்த முள்ளங்கியோடு அசைவ உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. முள்ளங்கி மற்றும் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்து அதிகரிப்பதால், உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மை உடையதாக மாற வாய்ப்புண்டு.

தேன் : சுத்தமான தேனுடன் இறைச்சியைச் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடுவதால் தேன் உணவை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும்.

கிழங்கு வகைகள்: கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், அது உடல் எடையை அதிகரிக்க செய்யும். வாயுத்தொல்லையை உண்டாக்கும்.

தயிர்: அசைவ உணவுடன் தயிர் சேர்க்கக் கூடாது. மேலும், பாலில் இருந்து தயாரிக்கப்படும் எந்த பொருளுடனும் இறைச்சி சேர்த்து சாப்பிடக் கூடாது. கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடவேக் கூடாது.

பயறு: முளைகட்டிய பயறு மற்றும் இறைச்சியில் புரதம் அதிக அளவு உள்ளது. உடல் இயக்கத்துக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம் என்றாலும், அதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் மூட்டுவலி ஏற்படும். இது உடலில் மதமதப்பை ஏற்படுத்தி உற்சாகத்தை இழக்கச் செய்யும்.

கீரை: இறைச்சியுடன் கீரை சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். இதனால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள்: அசைவ உணவு உண்டதும் ஐஸ்கிரீம், சோடா மற்றும் குளிர்பானங்கள் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை அதிகரிக்க செய்யும். மேலும், செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி, தூக்கமின்மை, உடல் அசதியை உண்டாக்கும்.

Chella

Next Post

சென்னை ஆதம்பாக்கத்தில் ரவுடி சீனிவாசன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை அதிரடியாக தட்டி தூக்கிய காவல்துறையினர்….! ஒரு காவலர் பணியிடை நீக்கம்….!

Fri May 19 , 2023
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (40) பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் சீனிவாசன் தன்னுடைய வீட்டின் அருகே வசிக்கும் உறவினர் ஒருவரின் 16 வது நாள் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். அப்போது ஒரு ஆட்டோ, 4 இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றில் அங்கு வந்த ஒரு கும்பல், சீனிவாசனை சரமாரியாக வெட்டியது. இதை பார்த்து அங்கு […]
கேரளாவில் மீண்டும் ஒரு பயங்கரம்..!! சிறார்களை வைத்து நரபலி பூஜை..?? சிக்கிய பெண் சாமியார்..!!

You May Like