ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால், பலர் உடல் எடை அதிகமாகி அவதிப்படுகிறார்கள். உடல் பருமனை குறைக்க பல்வேறு வழிகளையும் பின்பற்றி வருகின்றனர். சிலர் கொழுப்பை எரிக்க வெந்நீர் குடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், வெந்நீர் குடிப்பது உண்மையில் உடல் கொழுப்பைக் குறைக்குமா? இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
வெந்நீர் குடிப்பது உடல் கொழுப்பை குறைப்பதோடு இன்னும் பல உடல் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், வெந்நீரை அருந்துவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது உண்மைதான். இது உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். வெந்நீரைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் உள்ள கொழுப்பும் குறையத் தொடங்குகிறது. ஆனால், எப்படி வெந்நீரைக் குடிக்க வேண்டும் என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. வெந்நீரைக் குடிப்பதற்கான சரியான வழியையும் அதன் நன்மைகளையும் வாங்கப் பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க வெந்நீர் குடிப்பது மிகவும் அவசியம். ஆனால், வெந்நீரை நேரடியாகக் குடித்தால் அது சரியல்ல. அதனால் தான் உடல் எடையை குறைப்பதற்காக வெந்நீரை குடிக்கும் போதெல்லாம், அதில் சிறிது தேன் கலந்து குடித்தால், அதிக பலன் கிடைக்கும் என்கின்றனர். இதனால் தொப்பையும் விரைவில் குறையும். வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி6, அமினோ அமிலங்கள், கார்போஹைட்ரேட், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் ஆகியவை உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும், இதனால் உடல் எடை வேகமாக குறையும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தேனும், வெந்நீரும் சேர்ந்து நல்ல முறையில் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். வழக்கமான வெந்நீரில் தேன் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். இதனால், கொழுப்பு மற்றும் கல்லீரல் பிரச்சனையும் சீராகிறது. வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால், வளர்சிதை மாற்றம் பலப்படுகிறது. இதனால் உணவு எளிதில் ஜீரணமாகி வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாக வழிவகுக்கிறது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.