fbpx

அடிக்கிற வெயிலுக்கு அடிக்கடி தலைவலி வருதா..? இந்த ஒரு ஜூஸ் குடித்தால் எந்த வலியாக இருந்தாலும் பறந்து போயிடும்..!!

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மக்கள் வெளியில் செல்ல சற்று அச்சப்படுகிறார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கும். கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து வருகிறது. மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

நீரிழப்பு என்பது தலைவலிக்கு ஒரு பொதுவான காரணமாகும். எனவே, தண்ணீர் குடிப்பது அல்லது தர்பூசணி போன்ற நீர் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நீரிழப்பு காரணமாக ஏற்படும் தலைவலியைத் தடுக்க அல்லது குறைக்க உதவும். தர்பூசணியில் அமினோ அமிலம் சிட்ருலின் உள்ளது. இது இரத்த நாளங்களைத் தளர்த்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தலைவலியை குறைக்க உதவுகிறது. தர்பூசணி சாறு அனைத்து வகையான தலைவலிகளுக்கும் மருந்தாக இல்லாவிட்டாலும், இது நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நீரேற்றம் செய்யும் சிற்றுண்டியாக இருக்கலாம் என உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த வெயில் காலத்தில் தலைவலி ஏற்பட்டால் கவலையை விட்டுவிட்டு தர்பூசணி வாங்கி அதனை ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் தலைவலியை குறைத்துக் கொள்ளலாம். தர்பூசணி சாறு ஒருவரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் சருமத்தை நீரேற்றமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ‘இந்தி கூட்டணிக்காக தமிழக மக்களை வஞ்சிக்கும் திமுக அரசு’..!! நாளை பாஜக சார்பில் கருப்புக் கொடி போராட்டம்..!! அண்ணாமலை அதிரடி

English Summary

If you get a headache during the hot season, you can reduce the headache by buying watermelon and drinking its juice instead of worrying.

Chella

Next Post

’அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும்’..!! சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு..!!

Fri Mar 21 , 2025
Minister Periyakaruppan has announced that all ration shops will be given their own buildings to build.

You May Like