fbpx

வெயில் காலத்தில் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா..? அப்படினா இந்த ஜூஸை குடிங்க..!!

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மக்கள் வெளியில் செல்ல சற்று அச்சப்படுகிறார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கும். கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து வருகிறது. மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். நீரிழப்பு என்பது தலைவலிக்கு ஒரு பொதுவான காரணமாகும். எனவே, தண்ணீர் குடிப்பது அல்லது தர்பூசணி போன்ற நீர் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நீரிழப்பு காரணமாக ஏற்படும் தலைவலியைத் தடுக்க அல்லது குறைக்க உதவும்.

தர்பூசணியில் அமினோ அமிலம் சிட்ருலின் உள்ளது. இது இரத்த நாளங்களைத் தளர்த்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தலைவலியை குறைக்க உதவுகிறது. தர்பூசணி சாறு அனைத்து வகையான தலைவலிகளுக்கும் மருந்தாக இல்லாவிட்டாலும், இது நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நீரேற்றம் செய்யும் சிற்றுண்டியாக இருக்கலாம் என உணவியல் நிபுணர் ஃபௌசியா அன்சாரி தெரிவித்துள்ளார்.

இந்த வெயில் காலத்தில் தலைவலி ஏற்பட்டால் கவலையை விட்டுவிட்டு தர்பூசணி வாங்கி அதனை ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் தலைவலியை குறைத்துக் கொள்ளலாம். தர்பூசணி சாறு ஒருவரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் சருமத்தை நீரேற்றமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

பீகாரைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளி அடித்து கொலை….! கேரளாவில் பரபரப்பு….!

Tue May 16 , 2023
பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் மாஞ்சி ( 36).தலித் சமூகத்தை சேர்ந்த ராஜேஷ் கூலி தொழிலாளி என்று கூறப்படுகிறது இவர் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள கிழிச்சேரி பகுதியில் கோழிப்பண்ணையில் பணியாற்றி வந்திருக்கிறார். இத்தகைய நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை இவர் கடை பகுதியில் இருக்கின்ற தெருவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை […]
தகன மேடையில் எரிந்த பெண்ணின் சடலம்..!! இறைச்சியை பங்கு போட்டு சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like