என்ன தான் வெயில் அதிகம் இருந்தாலும், இரவில் பனி அதிகம் உள்ளது. இதனால் பலர் சளி தொல்லையினால் அவதிப்படுகின்றனர். எப்படியாவது சளியை குறைத்து விட வேண்டும் என்று ஒரு சில போராட, மேலும் சிலர், எப்படியாவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து ஒல்லியாகி விட வேண்டும் என்று போராடுகிறார்கள். இப்படி பல போராட்டங்களை சந்திக்கும் மக்களுக்கு மருத்துவர் சிவராமன் அற்புதமான மருந்து ஒன்றை பரிந்துரைத்துள்ளார்.
இன்று நாம் காரத்திற்கு பயன்படுத்தும் மிளகாய் வகைகள் எல்லாம் இடைக்காலத்தில் வந்தது தான். ஆனால், நமது முன்னோர்கள் பாரம்பரியமாக காரத்திற்கு மிளகு தான் பயன்படுத்தினார்கள். அந்த வகையில், நமக்கு முதலில் காரச்சுவையை கொடுத்தது மிளகுதான். நாம் மிளகாய் அதிகம் சாப்பிடும் போது, கட்டாயம் நமக்கு அல்சர், வாய்ப்புண் ஏற்படும். இவ்வளவு ஏன், மிளகாய் வற்றலை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோயைக்கூட ஏற்படும்.
ஆனால், நாம் மிளகை எவ்வளவு சாப்பிட்டாலும், அது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத்தான் செய்யும். அதே சமயம், மிளகு சாப்பிடுவதால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இதனால் காரம் தேவைப்படும் இடத்தில, முடிந்த வரை மிளகு தூள் பயன்படுத்துவது நல்லது. சளி பிரச்சனை உள்ளவர்கள் கண்ட மருந்தை குடிக்கலாம், மிளகு கஷாயம் குடிக்கலாம். இதனால், தும்மல், மூக்கடைப்பு, நீரேற்றம், தலைவலி, சைனட்டீஸ் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
நாள்பட்ட ஆஸ்துமாவை கூட மிளகு குணமாகும். மேலும், நாள்பட்ட மூட்டு வலியை மிளகு குணமாகும். வெண்படை என்கிற தோலில் வருகிற நோய்க்கு இந்த மிளகு தீர்வு கொடுக்கும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், உடலில் உள்ள கெட்டக் கொலஸ்ட்ராலைக் குறைக்க மிளகு ஒரு சிறந்த மருந்து, இப்படி மிளகைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு மிளகு நமக்கு பல நோய்கள் வராமல் தடுத்து பாதுகாக்கிறது என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.