fbpx

உங்கள் துணைக்கு இந்த இடத்தில் மச்சம் இருக்கா..? கணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! பண மழை கொட்டப் போகுது..!!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, உடலில் இருக்கும் மச்சங்களை வைத்து அதன் பலன்களை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். பொதுவாக நம் உடலில் இருக்கும் மச்சங்களின் அடிப்படையில் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பணவரவு, சொத்து சேர்க்கை, பதவி உயர்வு, ஆடம்பர வாழ்க்கை என்று பல நன்மைகள் ஏற்படும்.

ஆனால், ஒரு சிலருக்கு மச்சங்கள் அப்படியே வாழ்வில் எதிர்பாராத பல தடைகளை ஏற்படுத்தும். பிறக்கும்போதே ஒரு சிலருக்கு உடலில் மச்சங்கள் இருக்கும். இந்த மச்சங்கள் எப்போதும் மறையாது என்பதால் இதை அடையாளமாகவும் கருதி வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு ஒரு சில இடத்தில் இருக்கும் மச்சங்கள் அவர்களின் வாழ்க்கை துணைக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இதைக் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

1. பெண்களுக்கு புருவத்தில் மச்சம் இருந்தால் இவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாமல் சிக்கனமாய் வாழபவர்களாக இருப்பார்கள்.

2. நெற்றியில் வலது புறத்தில் மச்சம் இருந்தால் தைரியம், எதையும் தெளிவாக பேசும் குணமுடையவர்களாக இருப்பார்கள்.

3. வலது கண்ணில் மச்சம் இருந்தால் கர்வம் இல்லாமல் அடக்கமான குணமுடையவர்களாக இருப்பார்கள்.

4. இடது கண்ணில் மச்சம் இருந்தால் கடின உழைப்பாளியாகவும், வாழ்க்கை துணையின் உழைப்பிற்கு ஊக்கமளிப்பவர்களாக இருப்பார்கள்.

5. மூக்கின் மேல் மச்சம் இருந்தால் மிகவும் பொறுமைசாலிகளாக இருப்பார்கள்.

6. இடது கழுத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.

7. இடது தோளில் மச்சம் இருந்தால் குடும்பத்தை சிறப்பாக நிர்வாகம் செய்பவர்களாக இருப்பார்கள்.

8. இடது மற்றும் வலது மார்பகங்களில் மச்சம் இருந்தால் செல்வாக்கு நிறைந்தவர்களாகவும், நற்குணம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

9. மார்பகங்களுக்கு மேலே மச்சம் இருப்பவர்கள் பணக்கஷ்டம் ஏற்பட்டாலும், குடும்பத்தை மகிழ்ச்சியாக கொண்டு செல்வார்கள்.

10. வலது பாதத்தில் மச்சம் இருந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

மேலே குறிப்பிட்ட இடங்களில் மச்சம் இருக்கும் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக தான் இருப்பார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

Read More : கொளுத்தும் வெயில்..!! ஏசி வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!! சரியான ஏசியை தேர்வு செய்வது எப்படி..?

English Summary

According to astrology, our ancestors have predicted the benefits of moles on the body.

Chella

Next Post

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் & இறைச்சி கடைகள் இயங்காது...!

Thu Apr 10 , 2025
TASMAC shops will remain closed across Tamil Nadu today

You May Like