fbpx

”இல்லத்தரசிகள் மகிழ்ச்சி”..!! ”இனி குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்”..!! எப்படி தெரியுமா..?

தற்போதைய காலகட்டத்தில் கேஸ் அடுப்பு, சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். எல்பிஜி எரிவாயுவின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மக்களும் அதை எளிதாக சமைக்க பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில், வீடுகளில் சிலிண்டர்கள் மூலம் எல்பிஜி எரிவாயு கிடைக்கிறது. அது தீர்ந்த பிறகும் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும், சிலிண்டர் முன்பதிவு மக்களின் பட்ஜெட்டில் அதிக செலவை உண்டாக்குவதாக கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த முறையை நீங்கள் பின்பற்றினால், சற்று குறைந்த விலையில் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.

தற்போது, பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலமே சிலிண்டரை முன்பதிவு செய்துவிடுகின்றனர். இதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்வதன் மூலம் மக்கள் பல வகையான நன்மைகளையும் பெறுகிறார்கள். இவ்வாறு செய்தால், தள்ளுபடி கூப்பன்கள் அல்லது கேஷ்பேக்குகள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக சிலிண்டருக்கு குறைவான கட்டணம் செலுத்தினால் போதும். இந்த தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் தொகையானது ஆன்லைன் சிலிண்டர் புக் செய்யப்படும் செயலியை பொறுத்து மாறுபடும்.

ஆன்லைன் சிலிண்டர் புக்கிங் நன்மைகள் :

* ஆன்லைன் முன்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.

* எல்பிஜி ரீஃபில்களை முன்பதிவு செய்ய பாதுகாப்பான மற்றும் வசதியான வழி.

* கேஸ் ஏஜென்சிக்குச் செல்வது, விநியோகஸ்தரைத் தொடர்புகொள்வது என எந்தத் தொல்லையும் கிடையாது.

* கேஸ் சிலிண்டரை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் முன்பதிவு செய்யலாம்.

* இதில் கட்டணம் செலுத்தும் முறையும் மிக எளிது.

இந்நிலையில், செப். 1ஆம் தேதி அன்று எல்பிஜி விலையில் மாற்றம் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களாகவே மாற்றப்படவில்லை. ஆனால், வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலை மாற்றம் கண்டன. இதனால், இல்லத்தரசிகள் எல்பிஜியின் விலையின் மீதும், அதில் இருந்து எவ்வாறு சேமிப்பை மேற்கொள்வது என்பது குறித்தும் மிக கவனமாக இருக்கின்றனர்.

Chella

Next Post

உங்கள் வங்கிக் கணக்கை உடனே செக் பண்ணுங்க..!! சிக்கலில் மாட்டிக்காதீங்க..!! ஏன் தெரியுமா..?

Sun Aug 27 , 2023
இன்றைய காலகட்டத்தில் வங்கிக் கணக்குகள் இல்லாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். தற்போது அனைவருமே வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர். மேலும், பண பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு கட்டாயம் அவசியம். வங்கிக் கணக்கு இல்லையென்றால், பெரிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களும் உள்ளனர். ஆனால், அவற்றை முறையாக பராமரிப்பதில்ல்லை. ஒருவருக்கு எத்தனை வங்கிக் கணக்குகள் இருக்கலாம்? ஒரு இந்தியர் எத்தனை […]

You May Like