நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு அரசு தரப்பில் ரேஷன் கார்டுகள் குறித்து அப்டேட்டுகள் அடிக்கடி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் 9,500 பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டது.
மோசடிகளை தடுக்கும் விதமாக ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை அனைவரும் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதற்கான வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ‘Start Now’ என்பதைக் கிளிக் செய்க.
2. பிறகு உங்கள் முகவரியை மாவட்ட மாநிலத்துடன் நிரப்ப வேண்டும்.
3. பிறகு ‘Ration Card Benefit’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
4. உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும்.
5. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.
6. இங்கே OTP-ஐ நிரப்பிய பிறகு உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.
7. இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு உங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்படும்.