fbpx

உங்க ஃபோன், லேப்டாப் ரொம்ப மெதுவா வேலை செய்யுதா..? இதை மட்டும் டெலிட் செய்தால் போதாது..!!

நீங்கள் புதிதாக ஃபோன் அல்லது லேப்டாப் வாங்கி பயன்படுத்தும்போது வேகமாக இருக்கும். ஆனால், போகபோக மெதுவாக வேலை செய்யத் தொடங்கும். ஸ்டோரேஜ் நிரம்பியதால் தான் இப்படி ஆனது என்று அதை அழித்துக் கொண்டு இருப்போம். அதுவும் ஒரு காரணம் தான். ஆனால், அதோடு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது தான் குக்கீக்கள். சர்ச் இன்ஜின் இல்லாமல் நாளே முடியாது. எந்த இடத்தில் எந்த சந்தேகம் வந்தாலும் உடனே அதை தெரிந்து கொள்ள க்ரோம், மொசில்லா என்று தான் தேடுவோம். அந்த உலாவியில் உங்களின் பல தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள், உங்கள் கடவுச்சொற்கள், சர்ச் ஹிஸ்டரி, நீங்கள் பதிவிறக்கிய தரவுகள், குக்கீகள், தற்காலிக சேமிப்பு என்று குவிந்து கொண்டே இருக்கும்.

குக்கீகள், தற்காலிக சேமிப்பு மற்றும் வரலாறு என்றால் என்ன?

நீங்கள் இணையதளங்களைப் பார்வையிடும்போது குக்கீகளை ஏற்கும்படி கேட்கும் பாப்-அப்களைப் பார்த்திருப்பீர்கள். அவசரமாக தேடும் போது இது என்ன குறுக்கே என்று கண்ணை மூடிக்கொண்டு அதற்கு சரி என்று கொடுத்துவிட்டு போவீர்கள். இப்படி சரி என்று கொடுத்ததும் உங்கள் சர்ச் இன்ஜின், நீங்கள் பார்வையிடும் இணையதளங்களால் உருவாக்கப்பட்ட கோப்புகளை சேமித்துக் கொள்ளும். அதே வலைதளத்தை நீங்கள் மீண்டும் உள்நுழையும் போது இந்த கோப்புகள் முன்னாடி வந்து நின்று வேகமாக திறக்க உதவும். நல்லது தானே என்று கேட்கலாம். இதற்காக அவை சேமிக்கும் கோப்புகள் அதிகம். இதுபோல பல வலைத்தள கோப்புகள் சேரும்போது அதுவே பெரிய பாரமாக மாறிவிடும். அதே போலத்தான் பிரவுசிங் ஹிஸ்டரியும். அதோடு இது தனிப்பட்ட தரவுகளையும் வெளிப்படையாக காட்டும். எனவே, உங்களது சர்ச் இன்ஜினின் குக்கீகளையும், ஹிஸ்டரியையும் அவ்வப்போது அழித்துவிடுவது நல்லது.

Google Chrome…

* உங்கள் கணினியில் Chrome-ஐ திறந்து மேல் வலது மூலையில் உள்ள மூன்று-புள்ளியை கிளிக் செய்யவும்.

* அதில், More Tools என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் Browsing History, Cookies and Other Site Data, Cached Images and Files என்ற அனைத்தையும் அழித்துவிடலாம். உங்கள் தற்காலிக சேமிப்பை அழிக்கும் பட்சத்தில், எல்லா நேரமும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் .

Mozilla Firefox…

* பயர்பாக்ஸுக்கு, மேல் வலது மூலையில் உள்ள ஹாம்பர்கர் மெனுவைக் கிளிக் செய்யவும்.

* இடது பேனலில் இருந்து தனியுரிமை மற்றும் பாதுகாப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் குக்கீகள் மற்றும் தளத் தரவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.

* Firefox மூடப்பட்டிருக்கும் போது குக்கீகள் மற்றும் தளத் தரவை நீக்கு என்ற பெட்டியைத் தேர்வு செய்து, தரவை அழி என்பதைக் கிளிக் செய்யவும் .

* உங்கள் உலாவியின் தற்காலிக சேமிப்பு, குக்கீகள் மற்றும் வரலாற்றை நீங்கள் அழித்தவுடன், நீங்கள் பயன்படுத்தும் தளங்களில் மீண்டும் உள்நுழைய வேண்டும். இது கொஞ்சம் கூடுதல் காலம் எடுக்கலாம். ஆனால், அவ்வாறு செய்வது உங்கள் கணினியின் செயல்திறனை அதிகரிக்கும்.

Read More : நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு..!! சிக்கியது யார் தெரியுமா..? மனைவி பரபரப்பு புகார்..!!

English Summary

You may have seen pop-ups asking you to accept cookies when you visit websites.

Chella

Next Post

கொரோனா காலகட்டத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

Thu Oct 17 , 2024
Chennai High Court has ruled that road tax cannot be collected for Omni buses which are not running during the Corona lockdown.

You May Like