தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் (Health Inspector) பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் முழு விவரங்கள்…
பதவியின் பெயர்: சுகாதார அலுவலர் (Health Inspector)
காலியிடங்கள்: 12
சம்பளம்: ரூ.56,900 முதல் ரூ.2,09,200 வரை
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 19.11.2022
கட்டணம்:
பதிவுக் கட்டணம் ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.200
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2022 அன்று, 37 வயதினை பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.
கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தெரிவு முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இணையவழி விண்ணப்பத்தை 19.11.2022 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.