இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் முழு விவரங்கள்…
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் | சம்பளம் | கல்வித்தகுதி |
ஓட்டுநர் | 1 | ரூ.18,500-58,600/- | 8ஆம் வகுப்பு தேர்ச்சி, வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். ஒரு ஆண்டு அனுபவம் தேவை. |
தபேதார் | 1 | ரூ.15,900-50,400/- | 8ஆம் வகுப்பு தேர்ச்சி |
உதவி மின் பணியாளர் | 1 | ரூ.16,600-52,400/- | எலக்ட்ரிக்கல் /வயர்மேன் பிரிவில் ஐடிஐ படிப்பு. |
வேதபாராணம் | 1 | ரூ.15,700-50,000/- | தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
காவலர் | 2 | ரூ.15,900-50,400/- | தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
உதவி சுயம்பாகம் | 2 | ரூ.10,000-31,500/- | தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். |
உதவி பரிச்சாரகம் | 1 | ரூ.10,000-31500/- | தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். |
சமையலர் | 1 | ரூ.10,000-31,500/- | தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையல் அனுபவம் வேண்டும். |
சமையல் உதவியாளர் | 1 | ரூ.6,900-21,500/- | எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உணவு தாயார் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். |
துப்புரவாளர் | 1 | ரூ.4,200-12,900/- | தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19.12.2022. மாலை 05.45 மணி வரை ( விண்ணப்பங்கள் அலுவலகத்திற்குச் சென்றிருக்க வேண்டும்)
இந்து சமய அறநிலையத்துறை பணியின் பொது நிபந்தனைகள்:
* தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
* இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
* 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம்:
இதற்கான விண்ணப்பத்தை thiruvottiyurvadivudaiamman.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தபால் மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர் /செயல் அலுவலர். அருள்மிகு தியாகராஜகசுவாமி திருக்கோவில் திருவொற்றியூர், சென்னை – 19 ஆகும்.