கோடை காலம் வந்தாலே பல பழங்களின் சீசன்களும் தொடங்கிவிடும். அதிலும் மாம்பழங்கள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால் பல உடல் நலப்பிரச்சனைகளும் தீர்வாக அமைகிறது என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்த மாம்பழங்களை நீங்கள் ஊற வைத்து சாப்பிட்டதுண்டா..? ஆம், அப்படி சாப்பிடுவதால், முகப்பரு மற்றும் தோல் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எப்போதும் மாம்பழங்களை சாப்பிடுவதற்கு சுமார் 1 – 2 மணி நேரம் முன் ஊறவைத்து சாப்பிடும் போது இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பாவ்சர் சவாலியா தனது இன்ஸ்டா பக்கத்தில், “மாம்பழங்களைச் சாப்பிடுவதற்கு முன்பு எப்போதும் நீங்கள் ஊறவைத்து சாப்பிட வேண்டும் என்கின்றனர். சுமார் 1-2 மணி நேரம் மாம்பழத்தை நீங்கள் ஊறவைக்கும் போது, பழத்தில் உள்ள அதிகப்படியான ஃபைடிக் அமிலத்தை நீக்குகிறது. மேலும் இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் பிற தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. மேலும் உடலின் வெப்பத்தை உருவாக்கும் அதிகப்படியான பைடிக் அமிலத்தையும் அகற்றுகிறது. எனவே, நீங்கள் மாம்பழத்தை ஊறவைத்து சாப்பிடும் போது முகப்பரு, தோல் பிரச்சனைகள், தலைவலி, மலச்சிக்கல் மற்றும் பிற குடல் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.