மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ACMO (மருத்துவமனை நிர்வாகம்), தலைமைப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியின் முழு விவரங்கள்…
பணியின் பெயர் | காலியிடங்கள் | சம்பள விவரம் |
Sr. MO | 10 | ரூ.70,000 – 2,00,000/- |
Assistant Chief Medical Officer | 1 | ரூ.90,000 – 2,40,000/- |
Chief Engineer (Marine) | 3 | ரூ.90,000 – 2,40,000/- |
Port Captain | 3 | ரூ.90,000 – 2,40,000/- |
மொத்தம் | 17 | ரூ.90,000 – 2,40,000/- |
வயது வரம்பு:
08/11/2022 தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 34 முதல் 44-க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
பணிக்கான கல்வித்தகுதி:
* Sr. MO அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MD/MS/DNB தேர்ச்சி அல்லது குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் PG டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* Assistant Chief Medical Officer அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* Chief Engineer (Marine) போக்குவரத்து அமைச்சகத்தின் முதல் அல்லது இரண்டாம் வகுப்பு மோட்டார் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* Port Captain: Ministry of Transport Foreign Going Master’s Certificate அல்லது இந்திய கடற்படையில் அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
விண்ணப்பதார்கள் கல்வித் தகுதிகள், அனுபவம் மற்றும் தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் முகவரி https://ongcindia.com/web/eng/
விண்ணப்பிக்க கடைசி நாள் : 08/11/2022