fbpx

ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்க வேண்டுமா..? புதிய செயல்முறை அறிமுகம்..!!

ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் அட்டைகளில் முகவரியை புதுப்பிக்க அல்லது மாற்றுவதற்கான புதிய செயல்முறையை ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய செயல்பாட்டின் மூலம், ஆதார் பயனர்கள் எந்த வகையான ஆவணங்களையும் காட்டாமலே ஆதார் அட்டையில் முகவரியை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மிகவிரைவில் வரவுள்ளது. இவ்வாறு முகவரிச் சான்று இல்லாமல் முகவரி விவரங்களை மாற்றுவதற்கு குடும்பத் தலைவரின் (HoF) ஒப்புதல் இருந்தாலே போதும். இது குடும்பத் தலைவரின் கீழ் ஆதார் பெற்றவர்கள் முகவரிச் சான்று இல்லாதவர்கள் அதாவது குழந்தைகள், கணவன், மனைவி, பெற்றோர் போன்றவர்களுக்கு அவர்களுடைய முகவரியை மாற்றிக் கொள்ள வசதியாக இருக்கம். குறிப்பாக வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அடிக்கடி வீட்டை மாற்றும் போது இந்த வசதி பெரிதும் உதவியாக இருக்கும் என்று UIDAI அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்க வேண்டுமா..? புதிய செயல்முறை அறிமுகம்..!!

ஆதாரில் முகவரி மாற்றம் – ரேஷன் கார்டு, மதிப்பெண் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவை இருக்க வேண்டும் அல்லது விண்ணப்பதாரரும், அவருடைய குடும்பத்தலைவரும் இருவரின் இருவரின் பெயர், அவர்களுக்கிடையேயான தொடர்பு இருக்கும் ஆவணங்கள் அல்லது OTP அடிப்படையிலான அங்கீகாரமளித்தல் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் முகவரி மாற்றம் செய்யலாம். 

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது எப்படி?

* My Aadhar போர்ட்டலுக்குச் செல்லவும் அல்லது https://myaadhaar.uidai.gov.in-க்குச் செல்லவும்

* ஆன்லைனில் முகவரியைப் புதுப்பிக்க முற்படும்போது புதிய ஆப்ஷன் தேர்வு செய்யலாம்

* நீங்கள் குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். அதில் குடும்பத் தலைவரின் ஆதார் தவிர வேறு எந்தத் தகவலும் திரையில் காட்டப்படாது

* பிறகு, உங்களுக்கும் உங்கள் குடும்பத் தலைவருக்குமான உறவுச் சான்று ஆவணத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்

* இந்த சேவைக்கு நீங்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்

* வெற்றிகரமாக பணம் செலுத்திய பின், சேவை கோரிக்கை எண் (SRN) வழங்கப்படும். மேலும், இந்த முகவரி மாற்றுதல் கோரிக்கை குறித்து குடும்பத் தலைவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

* இந்த  அறிவிப்பைப் பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவர் My Aadhar போர்ட்டலில் லாகின் செய்து, முகவரி மாற்றுதல் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.

அவ்வாறு முகவரி மாற்றுதல் கோரிக்கையை நிராகரித்தால் அல்லது SRN எண் வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் ஏற்கவில்லை அல்லது மறுக்கவில்லை என்றால், கோரிக்கை முடித்துக் கொள்ளப்படும். இதுகுறித்து எஸ்.எம்.எஸ். மூலம் குடும்பத் தலைவருக்கும், உங்களுக்கும் தெரிவிக்கப்படும்.

Chella

Next Post

திருநெல்வேலி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை மரணம்….! பெற்றோருக்கு காவல்துறையினர் வலைவீச்சு….!

Thu Jan 5 , 2023
சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்ற திலீப்குமார் இவர் தன்னுடைய மனைவி ஹேமலதா அவர்களுடைய 2½ வயது பெண் குழந்தை ஹாசினி உள்ளிட்டோருடன் கடந்த 6 மாதங்களாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில், சக்திவேல் காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்ததாகவும், ஹேமலதா ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆலங்குளம் அரசு […]

You May Like