fbpx

இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட சிவன் சிலை..! மர்ம பெட்டகத்தில் என்ன உள்ளது.?

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில் தென்மேற்கு பகுதியில் மிண்டோ என்ற இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் திருக்கோயில். 1997ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த கோயில் பூமிக்கு அடியில் 1450சதுர அடி பரப்பில் குகையினுள் அமைக்கப்ட்ட அதிசய திருகோயிலாக இருந்து வருகிறது.

இக்கோயிலின் கருவறைக்குள் இருபக்கமும் பளிங்கு கல்லினாலான மாதா மற்றும் ராம் பரிவார் மந்திர் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற சுவர்களில் விநாயக மந்திரும், ஆஞ்சநேய மந்திரும் அமைத்துள்ளனர். உலகிலேயே முதன் முதலாக பளிங்கு கற்களால் கட்டப்பட்ட உயரமான சிலை இக்கோயிலில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குகை கோயிலில் 4.5 மீட்டர் உயரமுள்ள சிவபெருமான் சிலைக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் குகையில் அமைந்துள்ள இந்த சிவன் சிலை இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையில் பின்பக்கம் வண்ண விளக்குகளால் மின்னுவதால் பளிங்கு கற்களாலான சிவபெருமான் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நிறத்தில் காட்சியளிக்கிறார்.

மேலும் இந்த குகை கோயிலில் 128 சிறிய கோயில்களும் அமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள சிவ பக்தர்கள் இரண்டு மில்லியன் தடவை ஓம் நமச்சிவாயா என்ற மந்திரத்தை எழுதிய பெட்டகத்தை பூமியின் அடியில் 10 மீட்டர் ஆழத்தில் வைத்து அதன் மீது இந்த பளிங்கு கற்களாலான சிவபெருமான் சிலையை அமைத்துள்ளனர். மேலும் இதில் எட்டு விதமான லோகங்களும், உலகெங்கிலும் உள்ள புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரும், ஐம்பெரும் கடல் நீரும் இந்த பெட்டகத்தில் அமைந்துள்ளது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள இக்கோயிலை காண்பதற்காகவே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Rupa

Next Post

மன அழுத்தத்தை குறைத்து தூக்கமின்மை நோயை தீர்க்கும் சித்த மூலிகை..!

Tue Feb 13 , 2024
பொதுவாக தூங்குவதற்கு முன்பு பால் குடிக்கும் பழக்கம் பலரது வீடுகளிலும் இருந்து வருகிறது. அப்படியிருக்க பாலில் இந்த அஸ்வகந்தா மூலிகையை பொடியாக செய்து கலந்து குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும். நீண்டகாலமாக மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையினால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் இந்த அஸ்வகந்தா மூலிகை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களுக்கே குழந்தைகள் முதல் […]

You May Like