fbpx

மக்களே..!! ஒரு ரயில் தயாரிக்க எவ்வளவு கோடி செலவாகும் தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

உலகின் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்கை இந்திய ரயில்வே கொண்டுள்ளது. தினசரி இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். ரயிலில் பயணம் மேற்கொள்வது என்பது ஈஸியானது மற்றும் மலிவானது ஆகும். எனினும் ஒரு ரயிலை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரயிலில் இருக்கும் எஞ்சின் விலை அதிகமானது மற்றும் அதிகளவு செலவு ஆகும். இப்போது இந்திய ரயில்களில் 2 வகை என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் மின்சார மற்றும் டீசல் என்ஜின்களானது அடங்கும்.

ஒரு இன்ஜின் தயாரிப்பதற்கு சுமார் 13 முதல் 20 கோடி ரூபாய் செலவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இயந்திரத்தின் நேரம் மற்றும் சக்தியை பொறுத்து விலை மாறுபடும். இந்திய ரயில்வே கோச் ஒன்றை தயார் செய்வதற்கு சுமார் 2 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இது போகியில் வழங்கப்படும் வசதியை பொறுத்து விலை வித்தியாசப்படும். ஒரு ரயிலை தயாரிக்க சுமார் ரூ.66 கோடி செலவாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பயணிகள் ரயிலில் சுமார் 24 பெட்டிகள் இருக்கிறது. ஒவ்வொரு பெட்டிக்கும் சராசரியாக ரூ.2 கோடி செலவு ஆகும். இதன் காரணமாக போகிகளின் விலை 48 கோடி ரூபாயாக கணக்கிடப்படுகிறது. அதோடு ரயில் இன்ஜின் விலையானது 18 கோடி ரூபாய் வரை இருக்கிறது. நாட்டின் முதல் செமி அதிவேக இன்ஜின் இல்லாத ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுமார் 115 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படுகிறது. செய்தி நிறுவனமான PTI-இன் அறிக்கையின் படி, புதிய தலைமுறை 16 பெட்டிகள் கொண்ட அதிவேக வந்தே பாரத் ரயிலை உருவாக்க சுமார் 110 முதல் 120 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மத்திய அரசு வேலை ரெடி..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Mon May 22 , 2023
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) 2023ஆம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஜூன் மாதம் 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பதவிகள்: மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர் (Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant), டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) […]

You May Like