fbpx

தினமும் ஒரு முறையாவது பெருமாளின் இந்த ஸ்லோகத்தை படிங்க.! வாழ்வில் பல முன்னேற்றங்கள் ஏற்படும்.!

1. கஷ்டங்கள் நீங்க ஸ்ரீ வெங்கடேச கராவலம்பம் ஸ்லோகத்தை படிக்க வேண்டும்.
2. ஆயுள், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்விற்கு  துக்கமோசக அச்சுத அஷ்டகம் மந்திரத்தை தினமும் கூற வேண்டும்.
3. நினைத்தவை எல்லாம் நடக்க, புண்ணிய பலன்கள் கிடைக்க தினமும் ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம் மந்திரத்தை படிக்க வேண்டும்.
4. வாழ்வில் சகல மங்களகரமான விஷயங்களை பெறுவதற்கு ஸ்ரீ பாண்டுரங்க அஷ்டகம் மந்திரத்தை பெற்றோர்களை நினைத்தும், கடவுளை நினைத்தும் தினமும் படித்து வர வேண்டும்.
5. சனி, புதன் போன்ற கிரகங்களின் தோஷங்கள் விலகி வம்சம் வளர ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்லோகங்களை படிக்க வேண்டும்.
6. தீராத நோய்கள் தீருவதற்கு தினமும் தன்வந்திரி பகவான் துதியை பாட வேண்டும்.
7. வாழ்க்கையில் ஏற்படும் எந்தவிதமான ஆபத்துக்களையும் நீக்கி சந்தோசம் கிடைப்பதற்கு தினமும் ஸ்ரீராமர் துதியை பாட வேண்டும்.
8. ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஸ்ரீராம புஜங்காஸ்டகம் ஸ்லோகத்தை கூற வேண்டும்.
9. தீராத கடன் மற்றும் கிரக தோஷங்களில் இருந்து உடனடியாக நிவர்த்தி பெற நரசிம்மர் ஜெயந்தி அன்று ஸ்ரீ நரசிம்மர் துதியின் பன்னிரு நாமங்களையும் பாடி வரவேண்டும்.
10. புரட்டாசி மாதத்தில் ஹரிசரணாஷ்டம் ஸ்லோகத்தை பாடி வந்தால் நீடித்த ஆயுள் மற்றும் நிறைவான வாழ்வு கிடைக்கும்.
11. புரட்டாசி மாதத்தில் தினமும் பஞ்சாயுதத் துதியை பாடி வந்தால் திருமாலின் திருவருள் கிடைக்கும்.
12. தோஷங்கள் மற்றும் கடன்கள் தீருவதற்கு புரட்டாசி மாதத்தில் ஸ்ரீ வெங்கடேச காரவலம்பம் துதியை பாடி வரவேண்டும்.
13. கிருஷ்ண ஜெயந்தி அன்று முகுந்தன் துதியை பாடினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
14. துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியை வாழ்வில் நீடிக்க நவமி ராமர் துதியை இராமநவமி அன்று பாட வேண்டும்.
15. மகிழ்ச்சியான வாழ்க்கையும், மங்களகரமான வாழ்க்கையும் கிடைப்பதற்கு ராமர் மகாவிஷ்ணு துதியை பாடி வரவேண்டும்.
16. வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் நீங்க நாராயணீயம் துதியை பாட வேண்டும்.
17. வாழ்வில் முன்னேற ஏற்படும் தடைகளை நீக்கி மகிழ்ச்சியை சேர்க்க சுந்தரகாண்ட பாசுரம் பாட வேண்டும். இதுபோன்ற பெருமாளின் ஸ்லோகங்களை தினமும் ஒரு முறையாவது கூறி வந்தால் வாழ்வில் துக்கம் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

Rupa

Next Post

வாவ்...! ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டியில் கடன்...! தமிழக அரசின் அசத்தலான திட்டம்...! எப்படி பெறுவது...?

Wed Jan 24 , 2024
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் கைவினை கலைஞர்கள் அவர்களது மூலதன சேவையை பெற்று தொழிலை மேம்படுத்திட குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு […]

You May Like