இந்திய சந்தையில் ஒரு பேமண்ட் அப்ளிகேஷன் 30% சந்தை பயனர்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கும், டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன. அதேசமயம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் Gpay, PhonePe, Paytm உள்ளிட்ட செயலிகள் மூலம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்திய சந்தையில் ஒரு பேமண்ட் அப்ளிகேஷன் 30% சந்தை பயனர்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு டிசம்பர் 2023இல் அமலுக்கு வருகிறது. அப்படி வந்தால் அதிக பயனர்களைக் கொண்டுள்ள PhonePe (46.7%), Gpay (33.3%) ஆகியவை சிக்கலுக்கு உள்ளாகும். அதே நேரம் குறைந்த பயனர்களைக் கொண்டுள்ள அமேசான் பே, வாட்ச் அப் பே ஆகியோருக்கு சாதமாக மாறும்.