fbpx

குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி கேரட் சாதம் இப்படி செய்து கொடுங்க.! உடனே காலியாகிடும்.!

கேரட்டில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு கேரட்டை பொறியலாகவோ, கூட்டாகவோ செய்து கொடுத்தால் சாப்பிட மறுக்கின்றனர். இதனால் ஊட்டசத்து குறைபாடு குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. எனவே கேரட் சாதமாக குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி இப்படி செய்து கொடுத்து பாருங்க.

தேவையான பொருட்கள்: கேரட் 1/4 கிலோ, பாஸ்மதி அரிசி அரை கிலோ, பட்டை, கிராம்பு, ஏலக்காய் -2, புதினா, மல்லித்தழை, கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, பாதாம் முந்திரி – 4, காய்ந்த மிளகாய் -3, நெய் – 1 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை: முதலில் பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் போன்றவற்றை வறுத்தெடுத்து தனியாக அரைத்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கேரட்டை மிக்ஸியில் நன்றாக அரைத்து ஜூஸாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு குக்கரில் நெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து ஊற வைத்து அரிசியை போட்டு நெய்யில் கிளறி விட வேண்டும்.

கேரட் ஜூஸை குக்கரில் அரிசி மூழ்கும் அளவிற்கு ஊற்ற வேண்டும். பின்பு உப்பு சேர்த்து அரைத்து வைத்த பொடியை கலந்து குக்கரை மூடி விடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி தழைகளை தூவி விட்டு பரிமாறினால் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த கேரட் சாதம் தயார்.

Rupa

Next Post

தேசிய நெடுஞ்சாலைகளில் 1,000 ஓய்வு இல்லங்கள் கட்டப்படும்!… பிரதமர் மோடி அறிவிப்பு!

Sat Feb 3 , 2024
தேசிய நெடுஞ்சாலைகளில் முதற்கட்டமாக டிரக் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்காக 1,000 மேம்பட்ட ஓய்வு இல்லங்கள் கட்டப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் உரையாற்றிய அவர், இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் கூறினார். 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய பத்து ஆண்டுகளில் நாட்டில் சுமார் 12 கோடி வாகனங்கள் […]

You May Like