fbpx

சளி இருமல் தொல்லையா.? இனி கவலை வேண்டாம்.! இதை பண்ணுங்க போதும்.!?

பொதுவாக சளி என்பது நமது சுவாச பாதையில் இயற்கையாகவே உருவாகும் ஒன்று. ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த சளி நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சுவாச பாதையில் அதிகப்படியாக சளி தேங்கினால் உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும். இதனால் இருமல், காய்ச்சல், தொண்டை வலி முதல் மூச்சடைப்பு போன்ற பல பிரச்சனைகளும் உருவாகிறது. இந்த அதிகப்படியான சளியை உடலில் இருந்து எவ்வாறு வெளியேற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம்?

1. ஒவ்வொருவரும் அவர்களது உடலுக்கு போதுமான அளவு தண்ணீரை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான சளி  கழிவாக வெளியேறிவிடும்.
2. இஞ்சி டீ, எழுமிச்சை, புதினா டீ, சுடுதண்ணீரில் தேன் கலந்து குடிப்பது சூடாக சூப் செய்து குடிப்பது, பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது போன்றவற்றை செய்யலாம்.
3. சுவாசப் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பண்புடையது துளசி. இதை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சுவாச பாதையில் உள்ள கிருமிகள் நீங்கி சளி, இருமல் தொல்லை சரியாகும்.
4. தண்ணீரில் ஓமம், துளசி, சுக்கு போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி தொல்லை நீங்கும்.
5. ஆரஞ்ச், எழுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை ஜூஸாக குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமடைந்து சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு உடல் சோர்வடையாது.
6. சுக்கு பொடியை தேனில் கலந்து சளி இருமல் ஏற்படும் போது நாக்கில் தடவினால் இருமல் நீங்கும்.
7. குழந்தைகளுக்கு வெற்றிலையில் கற்பூரத்தை வைத்து சூடு செய்து கற்பூரம் உருகியதும் அந்த திரவத்தை மூக்கு மற்றும் நெஞ்சு பகுதியில் தேய்த்து வந்தால் மூச்சு விட எளிதாக இருக்கும்.

Rupa

Next Post

இளம் வயதிலேயே நரைமுடி தொல்லையா.! தேங்காய் எண்ணெய் இப்படி பயன்படுத்தி பாருங்கள்.!?

Fri Mar 8 , 2024
தற்போதுள்ள இளம் தலைமுறையினரான 18 முதல் 25 வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நரைமுடி ஏற்படுவது மிகப்பெரும் தொல்லையாக இருந்து வருகிறது. அந்த காலகட்டத்தில் 30 வயதை தாண்டிய பின்னர் தான் நரைமுடி வளரும். ஆனால் தற்போதுள்ள உணவு பழக்கங்களினாலும், வாழக்கை முறையினாலும் பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன. அதில் நரைமுடியும் ஒன்று. மேலும் மரபு வழியாகவும் இந்த நரைமுடி பிரச்சனை ஏற்படும். இவ்வாறு இளம் தலைமுறையினருக்கு நரைமுடி வளருவது […]

You May Like