fbpx

பொடுகு தொல்லையா.! இந்த விஷயங்களை இனி பண்ணாதீங்க.!?

குளிர்காலம் வந்தாலே பலருக்கும் பொடுகு தொல்லை ஏற்பட்டு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். இதனால் தலையில் அரிப்பு மற்றும் பேன் தொல்லையும் ஏற்படும். இதனால் நமக்கு முடி உதிர்வு எதிர்பாராத அளவிற்கு அதிகமாக இருக்கும். நாமும் கடையில் இருக்கும் பல்வேறு எண்ணெய்களை மருந்துகளை வாங்கி பயன்படுத்தினாலும் அது நமக்கு பலன் தராது. இந்த பிரச்சனைக்கு வீட்டில் இருந்தபடியே சிம்பிளான டிப்ஸை பயன்படுத்தி தீர்வு காணலாம். மேலும், பொடுகு வராமல் தடுக்கவும் சில விஷயங்களை பின்பற்றினால் போதும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குளிர்காலம் என்பதால் பெரும்பாலும் நாம் வெந்நீரில் குளிப்போம். தலைக்கு ஊற்றும் நீர் சூடாக இருந்தால் அது பொடுகு உருவாக காரணமாக இருக்கும். எனவே, மிக மிக குறைவான அளவிலான சூட்டில் இருக்கும் வெந்நீரை தலை குளிக்க பயன்படுத்துவது நல்லது. மேலும் பலருக்கும் அடிக்கடி தலை குளித்தால் ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சனை ஏற்படுகிறது என்று ஒருமுறை தலை குளித்தால் மீண்டும் தலை குளிக்க அதிக நாட்கள் எடுத்துக் கொள்வார்கள். இதனால் தலையில் அழுக்கு சேர்ந்து பொடுகு தொல்லையை உருவாக்கி முடி உதிர்வை கொடுக்கும்.

குளிர்காலத்தில் போர்வை, தலையணை உறை இவற்றை துவைத்தால் வெகு சீக்கிரம் காயாது என்பதால், துவைக்க மாட்டார்கள். இதுவும் முடி உதிர்வு, பேன் தொல்லை, பொடுகு தொல்லை ஏற்பட முக்கிய காரணமாகும். ஒவ்வொரு வாரமும் போர்வை, பெட்ஷீட், தலையணை உறையை கண்டிப்பாக துவைத்து பயன்படுத்த வேண்டும். தலைக்கு எண்ணெய் வைக்காமல் வறட்சியுடன் இருந்தாலும் அது பொடுகு தொல்லையை ஏற்படுத்தும். வறண்ட நிலையில் தலை இருப்பதால் தலையில் அரிப்பு உள்ள பிரச்சனை ஏற்பட்டு முடி உதிர்வும் ஏற்படும். வழக்கத்திற்கு மாறாக உடல் மற்றும் தலை குளிர்காலங்களில் மிகவும் வறண்ட நிலையில் இருக்கும். எனவே, அந்த நாட்களில் தலைக்கு எண்ணெய் வைத்து பராமரிப்பது அவசியம்.

Rupa

Next Post

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது..!! பிரதமர் மோடி அறிவிப்பு..!!

Sat Feb 3 , 2024
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய இந்த கவுரவம் குறித்து அத்வானியிடம் பேசி எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். நம் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவராக, அத்வானி ஜி இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மகத்தானது. அவருக்கு […]

You May Like