fbpx

மன அழுத்தத்தினால் அவதிப்படுறீங்களா.! இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்.!?

நவீன காலகட்டத்தில் அன்றாட பழக்கவழக்கங்களினாலும், துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதனாலும், உடலில் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைந்து பல நோய்கள் தாக்குகின்றன. இவ்வாறு உடலில் பல்வேறு நோய்கள் பாதித்து பலருக்கும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு மனதளவிலும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இப்படிபட்ட வேகமான வாழ்க்கை முறையினால் மன பதட்டம், மன குழப்பம், கவலை அதிகரித்து நோய்வாய்படுகின்றனர்.

இவ்வாறு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மருத்துவரிடம் சென்று பல மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் பலருக்கும் இது நிரந்தர தீர்வு தருவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் இந்த மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஒரு சில உணவு முறைகளின் மூலம் சரி செய்யலாம். எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்?

நம் மனநலத்தை மேம்படுத்தும் ஹார்மோன்கள் ஒரு சில உணவுகளில் இருக்கின்றன. அதாவது பாதாம் பருப்பு, வாழைப்பழம், அன்னாசி பழம், சோயா, டார்க் சாக்லேட், இனிப்புகள், அவகோடா போன்ற உணவுகளை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் செரடோனின், என்டோர்பின், டோபமைன், ஆக்சிடாசின் போன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. இதன் மூலம் ஆனால் ஒரு அளவிற்கு குறையும் குறிப்பாக காபி, டீ அதிகமாக அருந்தக்கூடாது. இது தூக்கத்தை கெடுத்து மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் தினமும்  உடற்பயிற்சியை செய்வதோடு வெள்ளை பூசணி விதைகள், தர்பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் மன அழுத்தம் குறையும்.

Baskar

Next Post

மாதம் ரூ.47,000 வரை ஊதியம்…! அறநிலையத்துறையில் வேலை…! உடனே விண்ணப்பிக்கவும்…!

Sat Jan 27 , 2024
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Computer Operator, Night Watchman பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 3 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 45 ஆகும். மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்கள் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் நன்றாக தெரிந்தால் போதுமானது. பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். […]

You May Like