fbpx

பெண்களே.! தும்மல் வரும்போது போது சிறுநீர் கசிவு ஏற்படுகிறதா.! ஆயுர்வேத மருத்துவபடி இதை பண்ணுங்க போதும்.!

பொதுவாக பெண்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் வயதிற்கு வருவது முதல் வயதான காலம் வரை பல்வேறு வகையான நோய் தாக்குதல்கள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதில் பலருக்கும் இது ஒரு பிரச்சனை என்று தெரியாத அளவிற்கு இருந்து வரும் நோய்தான் தும்மல் மற்றும் இருமல் வரும் போது கட்டுப்பாடுன்றி சிறுநீர் கசிவது. யூரினரி இன்கான்டினன்ஸ் என்று சொல்லபடகூடிய சிறுநீர் கசிவு நோய் பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்பும், 40 வயதிற்கு மேலயும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் இருமல் மற்றும் தும்மலின் போது மட்டுமே ஏற்படும் சிறுநீர்கசிவு நோயின் தீவிர நிலையில் கட்டுப்பாடின்றி தானாகவே சிறுநீர் வெளியேறும். சிறுநீர்ப்பையில் ஏற்படும் அலர்ஜி, பக்கவாதம், சிறுநீரக கற்கள், மலச்சிக்கல் மற்றும் குழந்தை பிறந்த பின்பு கர்ப்பப்பை இறக்கம் காரணமாக சிறுநீரக பையில் அழுத்தம் போன்றவை கட்டுப்பாடின்றி சிறுநீர் கசிவு ஏற்படுவதற்கு காரணங்களாக கூறப்பட்டு வருகிறது. இந்த நோயில் பல வகைகள் இருக்கின்றன. அதாவது, அர்ஜ் இன்காண்டினஸ், ஸ்ட்ரெஸ் இன்காண்டினஸ், ஓவர் ஆக்டிவ் பிளேடர், பங்க்ஸ்னல் இன்காண்டினஸ், போன்ற வகைகள் இருகின்றன.

1. அர்ஜ் இன்காண்டினஸ் – மூளை செல்களில் உள்ள நரம்பு அதிக அளவு தூண்டப்பட்டு எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாமல் உடனடியாக சிறுநீர் தானாகவே வெளியேறுவதுதான் அர்ஜ் இன்காண்டினஸ் என்பதாகும்.
2. ஸ்ட்ரெஸ் இன்காண்டினஸ் – உடல் செயல்களான இருமல், தும்மல், குதிப்பது, நடப்பது போன்ற நேரங்களில் கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறுவது தான் இதன் அறிகுறியாகும்.
3. ஓவர் ஆக்டிவ் பிளேடர் – ஒரு நாளைக்கு தொடர்ந்து அதிக முறை சிறுநீர் கழிப்பது இதன் அறிகுறியாக இருக்கிறது.
4. பங்ஸ்னால் இன்காண்டினஸ் – ஒரு சில நோய்களுக்கு தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்து வருவது, குழந்தை பிறந்த பின்பு ஏற்படுவது போன்ற நிலையில் கட்டுப்பாடின்றி தன்னை மீறி சிறுநீர் வெளியேறுவது தான் இதன் அறிகுறி.
மேலே குறிப்பிட்ட ஏதேனும் அறிகுறிகள் பெண்களுக்கு இருந்து வந்தால் உடனடியாக மருத்துவர் அணுகி சிறுநீர் பரிசோதனை மூலம் என்ன வகையான நோய் உள்ளது என்பதை கண்டறிந்து மருத்துவம் செய்ய வேண்டும். இல்லையென்றால் நோயின் பாதிப்பு அதிகமடைந்து தீவிரமாகும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக சிறுநீர் பாதை தொற்று வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் மேலும் கீகல் உடற்பயிற்சி முறையை அடிக்கடி பின்பற்ற வேண்டும். சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் போது கட்டுப்படுத்த கூடாது. இவ்வாறு ஒரு சில வழிமுறைகளின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம். ஆனால் நோய் பாதிப்பு அதிகமாகும் போது கண்டிப்பாக மருத்துவரை அணுகி அறிவுரை பெற்றுக் கொள்வது தான் உடல் நலத்திற்கு நன்மையை தரும்.

Baskar

Next Post

’என்னதான் இருந்தாலும் அவர் எங்கள் கட்சிக்காரர்’..!! ஓபிஎஸ் உடனான சந்திப்பு பற்றி சசிகலா பதில்..!!

Sat Feb 3 , 2024
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்று அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அங்கிருந்து புறப்பட்டபோது அண்ணாவின் நினைவிடத்திற்கு சசிகலா வருகை தந்தார். அப்போது காரில் இருந்து இறங்கி இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிக்கொண்டனர். இது தொடர்பாக […]

You May Like