fbpx

ரூ.2 லட்சம் சம்பளம்..!! வனத்துறையில் வேலை..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர் (குரூப் 1ஏ நிலை பணி – Assistant Conservator of Forests included in Group-IA Services) பதவிக்கான காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

ரூ.2 லட்சம் சம்பளம்..!! வனத்துறையில் வேலை..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

முக்கியமான நாட்கள்:

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 12.01.2023

இணைய வழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான காலம்: 17.01.2023 முதல் 19.01.2023

முதல்நிலை எழுத்துத்தேர்வு நாள்: 30.04.2023

முதல்நிலை எழுத்துத்தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் 2023

முதன்மை எழுத்துத் தேர்வு: செப்டம்பர் 2023

வாய்மொழித் தேர்வு & கலந்தாய்வு: டிசம்பர் 2023

மொத்த காலியிடங்கள்: 09

சம்பவ விவரம் : ரூ. 56,100 முதல் ரூ.2,05,700 வரை (நிலை 22)

வயது வரம்பு: 1.07.2022 அன்று 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்), ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் 1.07.2022 அன்று 34 வயதுக்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 1.07.2022 அன்று 39 வயதுக்குள் இருக்க வேண்டும்.

TNPSC Group 1A Service கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் பாடங்களில் ஏதேனும் ஒன்றினை முதன்மை பாடமாக கொண்டு இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

A Bachelor’s Degree in Forestry
A Bachelor’s Degree in Botany
A Bachelor’s Degree in Zoology
A Bachelor’s Degree in Physics
A Bachelor’s Degree in Chemistry
A Bachelor’s Degree in Mathematics
A Bachelor’s Degree in Statistics
A Bachelor’s Degree in Geology9. A Bachelor’s Degree in Agriculture
A Bachelor’s Degree in Horticulture
A Bachelor’s Degree in Agricultural Engineering
A Bachelor’s Degree in Civil Engineering
A Bachelor’s Degree in Chemical Engineering
A Bachelor’s Degree in Computer/Computer Science Engineering
A Bachelor’s Degree in Electrical Engineering
A Bachelor’s Degree in Electronics Engineering
A Bachelor’s Degree in Mechanical Engineering
A Bachelor’s Degree in Computer Applications
A Bachelor’s Degree in Computer Science
A Bachelor’s Degree in Environmental Science
A Bachelor’s Degree in Veterinary Science

முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான தேர்வு திட்டம்:

முதல்நிலை தேர்வு ஒற்றைத் தாள் கொண்டது. பொது அறிவு மற்றும் மனக்கணக்கு பாடங்களில் இருந்து 300 கேள்விகள் கேட்கப்படும்.

முதன்மைத் தேர்வு 5 தாள்களைக் கொண்டது. முதல் தாள் கட்டாய தமிழ் மொழி தகுதித் தாளாகும். 2ஆம் தாள் பொது அறிவு, 3ஆம் தாள் பொது ஆங்கிலம், 4 மற்றும் 5ஆம் தாள் விருப்ப பாடம் ஆகும். நேர்முகத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள் உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

Chella

Next Post

மின்சார வாகன ஓட்டிகளே...! தமிழகத்தில் 281 சார்ஜிங் நிலையம்...! மத்திய அரசு தகவல்...!

Wed Dec 14 , 2022
மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுதல் மற்றும் உற்பத்தி என்ற FAME திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. FAME-திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 68 நகரங்களில் 2,877 மின் வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள […]
அதிர்ச்சி..! தமிழக போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்கள் பல மடங்கு உயர்வு..!

You May Like