fbpx

Astrology | ”தலைவிதியை மாற்றும் செப்டம்பர் மாதம்”..!! ”இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகுது யோகம்”..!!

வேத ஜோதிடத்தில், கிரகங்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ராசிகளை மாற்றி வருகின்றன. ஜோதிடத்தின் படி, செப்டம்பர் மாதத்தில் 5 பெரிய கிரகங்கள் மாறவுள்ளன. இதனால் பல ராசிகளில் மாற்றங்கள் நிகழ இருக்கிறது. 12 ராசிகளிலும் இந்த கிரக மாற்றத்தின் பலன் சிறப்பாக இருக்கும்.  எனவே, செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த ராசியில் எந்தெந்த கிரகங்கள் சஞ்சரிக்கப் போகின்றன, யாருக்கெல்லாம் நல்ல நாட்கள் தொடங்கப் போகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

செப்டம்பர் 4ஆம் தேதி, சுக்கிரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். அதே நாளில் வியாழன் மேஷ ராசியிலும் பின்வாங்குகிறார். செப்.17ஆம் தேதி சூரியன் கன்னி ராசியிலும், செப்.24ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியிலும் சஞ்சரிக்கிறார். அத்தகைய சூழலில், அதன் சாதகமான மற்றும் எதிர்மறையான பலன்கள் 12 ராசிகளில் காணப்படும். மேலும், செப்டம்பர் மாதத்தில் மேஷம், மகரம், துலாம், சிம்மம் ராசிக்காரர்களிடமும் பல மாற்றங்கள் தென்படும் என்று கூறப்படுகிறது.

மேஷம் :

ஜோதிட சாஸ்திரப்படி செப்டம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது வியாபாரம் பெருகும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான பல வழிகள் திறக்கப்படும். தடைபட்ட பணிகள் நிறைவடையும்.

துலாம் : 

கிரக மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களின் தலைவிதி மாறலாம். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம், சொத்து வாங்கலாம். திருமண வாழ்வில் இனிமை நிலைத்திருக்கும்.

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மூத்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பதவி உயர்வு கூடும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும்.

மகரம் :

இந்த ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் திடீர் பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, வீட்டில் மரியாதை அதிகரிக்கும், வியாபாரம் பெருகும், செல்வமும், லக்ஷ்மியும் குடியிருக்கும்.

Chella

Next Post

அடடே நாவல் பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா….?

Sun Aug 27 , 2023
நாவல் பழத்தின் மீது, பலர் அதீத விருப்பம் கொண்டு இருப்பார்கள். அதுவும் இந்த நாவல் பழம் சீசன் வந்து விட்டால் போதும், கிராமப்புறங்களில் இருக்கின்ற நபர்கள் அனைவரும் இந்த நாவல் பழத்தை தேடி கிளம்பி விடுவார்கள். இந்த நாவல் மரம் காடுகளில், எளிதாக வளரும் தன்மை கொண்டது. சற்றே துவர்ப்பு சுவையுடன் கூடிய இந்த நாவல் பழம், பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கிறது. மேலும், பல்வேறு மருத்துவ பலன்களையும் கொண்டிருக்கிறது. இந்த […]

You May Like