fbpx

இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு..!! இன்று வேலைவாய்ப்புக்கான மாபெரும் முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

நாடு முழுவதும், இன்று 197 மாவட்டங்களில் தொழில்பழகுனர் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

மத்திய அரசின் திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் சார்பில் தேசிய தொழில் பழகுனர் முகாம் இன்று (டிசம்பர் 12) 197 இடங்களில் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் பங்கேற்க பல உள்ளூர் நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. அவை இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியை வழங்கி, அவர்கள் தங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைக்கும் வாய்ப்பை வழங்கும்.

இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு..!! இன்று வேலைவாய்ப்புக்கான மாபெரும் முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

முகாம்களில் பங்கேற்க விரும்புவோர் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில், அருகில் முகாம் நடைபெறும் இடத்தையும் கண்டறியலாம். 5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் திறன்பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது ஐ.டி.ஐ. டிப்ளமோ முடித்தவர்கள் அல்லது பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த முகாம்களின் மூலம், விண்ணப்பதாரர்கள் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழைப் பெறுவார்கள். மேலும், பயிற்சிக்குப் பிறகு அவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்படும் என்றும் திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

மாணவர்களுக்கு கசப்பான செய்தி..!! இனி விடுமுறையே கிடையாது..!! சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும்..!!

Mon Dec 12 , 2022
இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மாண்டஸ்’ புயல் மற்றும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் […]

You May Like