fbpx

சூப்பர் பென்ஷன் திட்டம்..!! மாதந்தோறும் ரூ.5,000 வருமானம் கிடைக்கும்..!! எப்படி சேர்வது..?

வயது முதிர்ந்த காலத்தில் மாதந்தோறும் நல்ல வருமானம் தரக்கூடிய திட்டம் தான் அடல் ஓய்வூதிய திட்டம். இந்த திட்டத்தை கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதிய தொகையாக மாதந்தோறும் சந்தாதாரருக்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை வழங்கப்படும். அதே சமயம் வருமான வரி செலுத்தாத இந்திய குடிமகன் அனைவருமே இந்த சமூக பாதுகாப்பு நலத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். ஏதாவது காரணத்தால் சந்தாதாரர் இறக்கும் பட்சத்தில் அவரின் வாழ்க்கை துணைக்கு அந்த பென்ஷன் தொகை வழங்கப்படும்.

இருவருமே உயிரிழந்து விடும் பட்சத்தில் அந்த பென்ஷன் தொகை நாமினிக்கு வழங்கப்படும். சந்தாதாரர் 60 வயது பூர்த்தி அடையும் போது மட்டுமே இந்த திட்டத்திற்கான 100 சதவீதம் பென்ஷன் தொகையையும் பெற முடியும். மேலும், 60 வயதிற்கு முன்பாகவே சந்தாதாரால் இந்த அடல் பென்ஷன் திட்டத்தில் இருந்து வெளியேற முடியாது. ஆனால், அவர் இறக்கும் பட்சத்தில் பென்ஷன் தொகை அடல் ஓய்வூதிய திட்டத்திற்கான காலம் முடியும் முன்பாகவே அவரின் வாழ்க்கை துணைக்கு அல்லது அவரின் நாமினிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மாணவர்களே..!! இன்று திறக்கப்படும் தமிழக பள்ளிகள்..!! அரசின் முக்கிய அறிவிப்பு..!!

Mon Jun 12 , 2023
தமிழ்நாட்டில் இன்று 6-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 1-5ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கோடை வெயில் […]

You May Like