இந்தியத் தர நிர்ணயக் குழு (Bureau of Indian Standards) உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் முழு விவரங்கள்:
பதவியின் பெயர்: Management Executives for NITS, Management Executives for PRTD
வயது வரம்பு: 45
சம்பளம்: ரூ.1.5 லட்சம்
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
NITS பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் எம்.பி.ஏ (Marketing/HR). 5 வருட அனுபவம் தேவை.
PRTD பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் எம்.பி.ஏ (HR)/Ph.D. 5 வருட அனுபவம் தேவை.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் / தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு https://www.bis.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து இ-மெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இமெயில் முகவரி: me.hrd@bis.gov.in
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 06.01.2023