fbpx

இயற்கை முறையில் குடல் புழுக்களை அகற்றலாம்..!! வீட்டில் இருக்கும் பொருட்களே போதும்..!! இப்படி பண்ணுங்க..!!

நமது உடலில் புழுக்கள் வசிக்க அசுத்தமே காரணம். நாடாப்புழு, கொக்கி புழு, உருளை புழு, சாட்டை புழு என்று பலவிதமான புழுக்கள் உடலில் உள்ள குடலுக்குள் வசிக்கின்றன. இதனால் 6 மாதங்களுக்கு ஒரு முறை பூச்சி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், கை வைத்திய முறையில் குடலில் உள்ள அனைத்து பூச்சிகளையும் வெளியேற்ற வீட்டில் இருக்கும் பொருட்களே போதும். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பப்பாளி: பப்பாளியை சிறிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து சாறாக்க வேண்டும். பெரியவர்கள் 20 மில்லி அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம். பப்பாளி அதிகம் காயாக இருக்க வேண்டாம். இவை அதிக உஷ்ணத்தை கொடுத்துவிடும். மேலும், இதை காலை வேளையில் குடித்தால் நல்லது. மேலும், இரவு தூங்க செல்லும்போது ஒரு டம்ளர் பாலில் பப்பாளி விதையை அரைத்து அரை டீஸ்பூன் அளவு கலந்து குடிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து 3 நாட்கள் மட்டும் குடித்தால் போதும்.

பூண்டு: பூண்டுக்கு மிஞ்சிய வைத்தியம் எதுவுமே இல்லை என்று சொல்வார்கள். வெள்ளை பூண்டை எடுத்து அதன் தோலை உரித்து வெறும் வாணலியில் வறுக்க வேண்டும். ஒருவர் 3 பல் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். வாசனை போக பூண்டை வறுத்து காலையில் வெறும் கடித்து பொறுமையாக மெல்ல வேண்டும். வேகமாக மென்றுவிடாமல் பூண்டு சாறும், உமிழ்நீரும் கலந்து மெதுவாக விழுங்க வேண்டும்.

சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது ஒரு பல் வறுத்து பொடியாக நறுக்கி தேனில் கலந்து கொடுக்கலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் இதனை சாப்பிட்டு வந்தால் போதும். தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட்டால் குடல் பூச்சிகள் மலம் வழியாக வெளியேறிவிடும். 3 மாதங்களுக்கு ஒருமுறை இப்படி செய்தால் போதும்.

வேப்பங்கொழுந்து: வேப்பங்கொழுந்தை 5 அல்லது 6 எண்ணிக்கையில் வரும்படி எடுத்து, ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து, அதனுடன் ஒரு பல் பூண்டு, ஒரு மிளகு, வேப்பங்கொழுந்து ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். அது அரை டம்ளர் அளவு வரும் போது இறக்கவும். பிறகு, அதனை நன்கு கடைந்து நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இது சற்று கசப்பாக இருந்தால், சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகள் கஷாயம் குடிக்க மறுத்தால், வேப்பங்கொழுந்துடன் சிறிதளவு கல் உப்பு சேர்த்து நன்கு அரைத்து சிறு உருண்டைகளாக பிடித்து காலையில் வெறும் வயிற்றில் மாத்திரை போல் விழுங்கினால் பூச்சிகள் இறந்து வெளியேறும்.

கொட்டைபாக்கு: துவர்ப்பு மிக்க கொட்டை பாக்கு பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது. கொட்டை பாக்கை சிறு உரலில் இடித்து தூளாக்கி சலித்து கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு பொடி எடுத்து குழந்தைக்கு மிளகு அளவு, வளர்ந்த சிறுவர்களுக்கு புளியங்கொட்டை அளவு வரும்படி வெதுவெதுப்பான நீர் விட்டு குழைத்து உருண்டையாக்கி கொடுக்கலாம் அல்லது பாலில் கலந்தும் கொடுக்கலாம். தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை இதை சாப்பிடலாம்.

விளக்கெண்ணெய்: குடல் புழுக்களுக்கு விளக்கெண்ணெய் பட்டாலே அலர்ஜி. சுத்தமான விளக்கெண்ணெய்யை எடுத்து, காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் அளவு விட்டு பொறுமையாக குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது வயதுக்கேற்ப 2 முதல் 4 துளிகள் வரை சேர்க்கலாம். அதிகம் சேர்த்தால் குளிர்ச்சி ஆகும். அதோடு சமயங்களில் வயிற்றுபோக்கும் அதிகரித்து உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும் என்பதால் கவனம் தேவை. ஒருமுறை மட்டுமே குடிக்க வேண்டும்.

அண்ட வாயுக்கீரை: அண்ட வாயுக்கீரை தான் பேதிக்கீரை என்று கூறப்படுகிறது. மாதம் ஒரு முறை இந்த கீரையை வதக்கி துவையலாக்கி அல்லது பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம். பெரியவர்கள் வாரம் 3 நாள் வரை இதை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு அளவாக வாரத்திற்குதுக்கு இரண்டு நாள் கொடுத்தால் போதுமானது.

Read More : உங்கள் குழந்தையின் பெயரை நீங்களே ரேஷன் கார்டில் சேர்க்கலாம்..!! எப்படின்னு தெரியுமா..?

English Summary

Home remedies are enough to get rid of all the bugs in the intestines manually.

Chella

Next Post

இந்த விஷயத்தை கடைபிடித்தால் உங்கள் வீட்டில் பணம் தங்கும்..!! கட்டாயம் செய்து பாருங்க..!!

Fri Sep 20 , 2024
Some Vastu Shastra can be followed to remove negative thoughts from home.

You May Like