அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ் தொடர்பான பாடங்களைக் கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முன்னதாக, நடப்பு கல்வியாண்டு (2022-23) முதல் புதிய பாடத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. இதன் கீழ், இளம்நிலை பொறியியல் படிப்புகளில் முதல் 2 பருவங்களில் தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட்பமும் ஆகிய 2 கட்டாயப்பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த தமிழ் பாடங்களைக் கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மைய இயக்குனர் முனைவர் பா. உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ளார்.
பணியில் முழு விவரங்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் | கல்வித் தகுதி | மாத ஊதியம் |
ஆசிரியர் (தற்காலிகம்) | 6 (பல்கலைக்கழக துறைகளில்) 17 (உறுப்புக் கல்லூரிகள்) | பிஏ (தமிழ்), எம்ஏ (தமிழ்), மற்றும் பிஎச்டி (அல்லது) பிஏ (தமிழ்), எம்ஏ (தமிழ்) மற்றும் NET/SLET/SET ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். | ரூ. 25,000 (தொகுப்பூதியம்) |
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, கல்விச் சான்றிதழ்கள் நகல்களோடு நேரடியாகவோ அல்லது ஸ்கேன் செய்து PDF வடிவில் மின்னஞ்சல் மூலமாகவோ 20.12.2022 (மாலை 5 மணிக்குள்) கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி:
முனைவர் பா உமா மகேஸ்வரி,
இயக்குநர்,
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்.
அசல் விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட சான்றிதழ்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி dirtamildvt@annauniv.edu ஆகும்.