fbpx

தொழில் தொடங்கும் நபர்களுக்கு ரூ.15 லட்சம் மானியம் வழங்கும் மத்திய அரசு…! எப்படி பெறுவது..?

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) செயல்படுத்தப்பட்டு வருகிறது. வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.15 லட்சம் திட்ட முதலீட்டில் ரூ.3.75 லட்சம் மானியத்துடன் வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கடனுதவி பெறுவதற்கு சொத்துப் பிணையம் தேவையில்லை. பொதுப் பிரிவினர் 45 வயதிற்குள்ளும், சிறப்புப் பிரிவினர் 55 வயதிற்குள்ளும்இருக்க வேண்டும். மனுதாரர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். www.msmeonine.tn.gov.in/uyegp இணையதளத்தில் தகவல்களை பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பள்ளி மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை அல்லது வட்டாட்சியரிமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்பட்டியல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

படிவத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட்ட விண்ணப்பம் மற்றும் உறுதிமொழிபடிவம் ஆகியவற்றை மாவட்ட தொழில்மைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 89255-34024, 89255-34025 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

English Summary

The central government will provide a subsidy of Rs 15 lakh to entrepreneurs

Vignesh

Next Post

வந்தாச்சு BSNL 5G இணைய சேவை..!! அதுவும் இந்த மாநிலங்களில் மட்டும்.. லிஸ்ட்-ல தமிழ்நாடு இருக்கா?

Wed Aug 7 , 2024
BSNL 5G SIM launch: High-speed 5G internet will soon be available in select cities
வந்தாச்சு பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை..!! மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

You May Like