பூமியில் உள்ள பல விஷ ஜந்துக்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால் விஷக் குளத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? செங்கடலில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நச்சுத்தன்மை வாய்ந்த குளம் பற்றிய தகவலை இன்று நாங்கள் உங்களுக்கு வழங்கப் போகிறோம். இந்த செங்கடல் குளத்தில் நீந்தினால் அவர்கள் இறந்துவிடுவார்களாம்.. மியாமி பல்கலைக்கழக குழு இந்த குளத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த குழுவை சேர்ந்த பேராசிரியர் சாம் புர்கிஸ் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். பேராசிரியர் சாம் பர்கிஸின் கூற்றுப்படி, இந்த குளத்தில் ஆக்ஸிஜன் இல்லை, அதே நேரத்தில் உப்புத்தன்மை ஆபத்தான அளவிற்கு உள்ளது.
இதன் காரணமாக, குளத்தின் உள்ளே செல்லும் உயிரினம் இறந்துவிடும் கடலின் ஆழத்தில் அமைந்துள்ள இந்த குளம் கடல்வாழ் உயிரினங்களுக்கு மரண பொறி போல் உள்ளது. செங்கடலின் அடிப்பகுதியில் 1,770 மீட்டர் ஆழத்தில் இந்த குளம் கண்டுபிடிக்கப்பட்டது.
உப்புநீர் குளம் என்பது கடலோரத்தில் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட உப்பு நீர் மற்றும் பிற இரசாயன கூறுகளால் நிரப்பப்பட்டுள்ள தாழ்வான இடமாகும்.. இது சுற்றியுள்ள கடலை விட சுமார் மூன்று முதல் எட்டு மடங்கு உப்புத்தன்மை கொண்டது. இந்த நீருக்கடியில் மரணப் பொறிகள் ஆழமான கடலில் உருவாகின்றன, மேலும் விலங்குகளை மயக்கமடைய வைக்கலாம் அல்லது கொல்லலாம்..
நீருக்கடியில் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனத்தை (ROV) பயன்படுத்தி 1,770 மீட்டர் ஆழத்தில் குளத்தை குழு கண்டுபிடித்தது. செங்கடலின் அடிப்பகுதியில் 10 மணி நேரம் டைவ் செய்து கடைசி ஐந்து நிமிடங்களில் இந்த கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
மியாமி பல்கலைக்கழகத்தின் குழுவின் ஒரு பகுதியாக இருந்த பேராசிரியர் சாம் புர்கிஸ் இதுகுறித்து பேசிய போது “ உப்புக் குளத்தில் ஆக்ஸிஜன் மற்றும் உயிருக்கு ஆபத்தான உப்பு அளவு இல்லை, அதாவது உள்ளே நீந்திய எந்த மீன் அல்லது உயிரினமும் உடனடியாக கொல்லப்படும்.. குளத்தில் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற நச்சு இரசாயனங்களும் உள்ளன. இதுபோன்ற குளங்களின் கண்டுபிடிப்பு, நமது கிரகத்தில் முதலில் கடல்கள் எவ்வாறு உருவாகின என்பதை அறிவியலாளர்களுக்கு கண்டறிய உதவும்.
உப்புநீர் குளங்கள் அதிக எண்ணிக்கையிலான நுண்ணுயிரிகளின் தாயகமாகவும், பல்லுயிர் வளம் நிறைந்ததாகவும் இருக்கின்றன.. இந்த நுண்ணுயிரிகள் இத்தகைய கடுமையான சூழல்களில் உயிர்வாழ முடியும் மற்றும் அவற்றைப் படிப்பதன் மூலம் பூமியில் வாழ்வின் வரம்புகளை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள முடியும். இந்த கண்டுபிடிப்புகள் இன்றியமையாதவை…” என்று தெரிவித்தார்..