fbpx

வாஸ்து டிப்ஸ் : வீட்டில் இந்த சிலைகளை வைத்தால் போதும்.! சகல பிரச்சனைகளும் தீரும்.!?

பொதுவாக நாம் வீடு கட்ட ஆரம்பிப்பதில் இருந்து கட்டி முடிக்கும் வரை வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையிலேயே அனைத்து விதமான செயல்களையும் செய்து வருகிறோம். அந்த அளவிற்கு வாஸ்து சாஸ்திரம் என்பது நம் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. எனவே வீட்டில் வாஸ்து சாஸ்திரத்தின் படி சிலைகளை வைப்பது பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர்.

குறிப்பாக வீட்டில் பணப் பிரச்சனை, கணவன் மனைவிக்குள் சண்டை, சொத்து தகராறு, பொருள் தகராறு, உடல் நலக்குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாஸ்து சரியில்லாததும் ஒரு காரணமாகும். இதற்கு ஒரு சில சிலைகளை குறிப்பிட்ட திசையில் வைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகள் உடனடியாக தீரும் என்று வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

  1. குதிரை சிலை – வீட்டில் தென்மேற்கு மூலையில் குதிரை சிலையை வைப்பதன் மூலம் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிப்பதோடு, குடும்பத்தில் பணவரவையும் அதிகரிக்கும்.
  2. தாய் பசு கன்று குட்டியுடன் இருக்கும் சிலை – இந்த சிலையை வீட்டு வாசலை எதிர் நோக்கி வைக்கும் போது வீட்டிற்குள் வரும் எதிர்மறையான ஆற்றலை விரட்டுகிறது. மேலும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது.
  3. ஆமை சிலை – சிலையை வீட்டின் வடக்கு பக்கத்தில் வைக்கும் போது வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி, மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  4. கிளி சிலை – மதுரை மீனாட்சி அம்மனின் அம்சமாக இருக்கும் கிளியின் சிலையை வீட்டில் வைத்தால் குழந்தைகளின் படிப்பு மற்றும் புத்தி கூர்மை அதிகரிக்கும்.
  5. மீன் சிலை – மீன் சிலையை வீட்டில் வைப்பதன் மூலம் லட்சுமி தேவியின் அருளும், செல்வமும் அதிகரிக்கும்.
  6. யானை சிலை – பணப்பிரச்சினை, சொத்து தகராறு, கடன் பிரச்சனை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் யானை சிலையை வைக்கும் போது இப்பிரச்சனைகள் தீரும் என்று நம்பப்பட்டு வருகிறது.
  7. விநாயகர் சிலை – தடைகளை நீக்கும் விநாயகரின் சிலை வீட்டில் வைக்கும் போது பல வெற்றிகள் வந்து சேரும்.

Rupa

Next Post

வி.சி.க-வில் இருந்த செல்வப்பெருந்தகை... காங்கிரஸ் தலைவரானது எப்படி தெரியுமா...?

Sun Feb 18 , 2024
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனுக்கு அடுத்து மிக முக்கிய தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை, கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது மங்களூர் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விசிகவிலிருந்து விலகி 2008-ம் ஆண்டு […]

You May Like