கம்மியான விலையில் அதிக சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்றால் அதற்க்கு நாம் நெல்லிக்காயை தான் வாங்க வேண்டும். ஆம், பார்க்க சின்னதாக இருந்தாலும் சத்துக்கள் இதில் ஏராளமாக உள்ளது. பால் மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காயை நாம் தினமும் சாப்பிட்டால் நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும்.
பல வெளிநாட்டு பழங்களையும் விட, இதில் தான் அதிகப்படியான மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இந்த நெல்லிக்காயை நாம் பல விதமாக நமது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக, காலையில் நீங்கள் தேநீர் குடிப்பவராக இருந்தால், அதை தவிர்த்து விட்டு, அதற்க்கு பதில் நெல்லிக்காய் சாறு குடிக்கலாம்.
உங்களுக்கு விருப்பமானால் நெல்லிக்காய் சாறுடன் சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம். வெறும் நெல்லிக்காய் பொடியை கொதிக்கும் சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடித்தால் ஆரோக்கியம் மேம்படும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க நெல்லிக்காய் உதவுகிறது. முடிந்த வரை அதிக பால், சர்க்கரையுடன் சேர்த்து தேயிலை தூள் கலந்து குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.
இந்த கலவை தேநீர் கிடையாது என்றும், இது தேயிலை பால் பாயசம் என்றும் மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். முறையான டீ என்பது, கொதிக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் தேயிலையை போட்டு, மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் மூடி வைத்து, அதன் பின்னர் வடிகட்டி குடிக்கலாம் இது தான் உண்மையான டீ என்று என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
அதே சமயம், நாம் தினமும் தேயிலை மட்டுமே குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு பதிலாக பல வகையான தேநீர் குடிக்கலாம். ஆனால், பலர் விலை குறைவான இந்த நெல்லிக்காயை விட்டு விட்டு அதிக விலை கொடுத்து வெளிநாட்டு பழமான கிவி போன்றவற்றை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், கிவி பழத்தை விட நெல்லிக்காயில் அதிகமான சத்துகள் இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
மேலும், இது குறித்து அவர் கூறும் போது, ஒரு சில பொருட்களில் இருக்கும் வைட்டமின் சி, வெயில் பட்டாலே போய் விடும். தன்மை கொண்டது. ஆனால், கொதிக்க வைத்தாலும் வைட்டமின் சி அப்படியே இருக்கும் ஒரே பொருள் நெல்லிக்காய் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Read more: Weight Loss: அரிசி சாப்பிட்டாலும் எளிதில் எடையைக் குறைக்கலாம்..!! எப்படி தெரியுமா..?