fbpx

கிழிந்த நோட்டு ஏடிஎம்மில் வந்தால் என்ன செய்வது?

ஏடிஎம்மில் சிதைந்த நோட்டுகள் கிடைத்தால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதற்கு புதிய நோட்டுகள் உடனடியாக கிடைக்கும்.

ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது எளிதான ஒன்றாகிவிட்டது. ஆனால், பல நேரங்களில் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது கிழிந்த நோட்டுகள் வெளிவருகின்றன. இதனால் சிக்கல் ஏற்படுகிறது. இந்த கிழிந்த நோட்டுகளால் எந்தப் பயனும் இல்லை. இதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இதற்கு நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதை நீங்கள் நல்ல நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

சிதைந்த அல்லது கிழிந்த நோட்டுகள் ஏடிஎம்மில் இருந்து வந்தால் அவற்றை மாற்றுவதற்கு எந்த ஏடிஎம்மில் பணம் எடுக்கப்பட்டதோ அந்த வங்கியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில், ஏடிஎம்மில் பணம் எடுத்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். பணம் எடுத்த ரசீதையும் அதனுடன் இணைக்க வேண்டும். ரசீது இல்லை என்றால், உங்கள் மொபைலில் வந்த SMS விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

இதுகுறித்து இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ‘எங்கள் ஏடிஎம்களில் வைக்கப்படுவதற்கு முன்பு நோட்டுகள் அதிநவீன வரிசைப்படுத்தும் இயந்திரங்கள் மூலம் சரிபார்க்கப்படுகின்றன. எனவே அழுக்கடைந்த/சிதைந்த நோட்டுகளை விநியோகிக்க வாய்ப்பு இல்லை. இருந்தாலும் எங்களுடைய எந்த கிளையிலும் கிழிந்த நோட்டுகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் உத்தரவுப் படி, கிழிந்த நோட்டுகளை நீங்கள் சம்பந்தப்பட்ட வங்கியிலேயே மாற்றிக் கொள்ளலாம். அவற்றை மாற்றித் தர முடியாது என்று எந்த வங்கியும் மறுக்க முடியாது. அப்படி மறுக்கும் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கியே நடவடிக்கை எடுக்கும். எனவே உங்களுக்கு ஏடிஎம்களில் கிழிந்த அல்லது சிதைந்த ரூபாய் நோட்டுகள் கிடைத்திருந்தால் அதைத் தகுந்த ஆதாரத்துடன் வங்கிக் கிளையில் விண்ணப்பித்து மாற்று நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

Next Post

உங்களிடம் 2 ரூபாய் நாணயம் உள்ளதா? நீங்களும் லட்சாதிபதிதான்..

Thu Oct 6 , 2022
நவராத்திரியின் புனித திருவிழா நடந்து வருகிறது. அதன்படி இன்று நவராத்திரியின் கடைசி நாளாகும். இதையொட்டி, மாதா வைஷ்ணோ தேவியை தரிசனம் செய்ய கத்ராவுக்கு செல்வதில் மக்களிடையே போட்டி நிலவியது. அந்த வகையில் உங்களிடம் மாதா வைஷ்ணோ தேவியின் படம் பொறிக்கப்பட்ட நாணயம் இருந்தால், நீங்கள் வீட்டில் இருந்த படி கோடீஸ்வரர் ஆகலாம். இந்த நாட்களில் பழங்கால மற்றும் பழைய நாணயங்கள் மீது மக்கள் மத்தியில் அதிக மோகம் உள்ளது. மக்களின் […]

You May Like