வேண்டுதலை நிறைவேற்றும் திருசெம்பொன் செய் பெருமாள் கோவில்..! எங்க இருக்கு தெரியுமா..?

temple 2

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருசெம்பொன் செய் பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் 31வது தலமாகவும், திருநாங்கூர் 11 திருப்பதிகளில் ஒன்றாகவும், வைணவ மரபில் பெரும் புனித இடமாக விளங்குகிறது. திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், திருமலிசையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்த இத்தலம், ஆன்மிகச் சிறப்பும் புராண வரலாறும் சங்கமிக்கும் தெய்வீகத் தளம்.


இராமவதாரத்தில், ராவணனை வதம் செய்த பின் ஏற்பட்ட பாபத்தை போக்க, திருடநேத்திரர் முனிவரின் ஆலோசனைப்படி, இராமர் பொன்னால் ஆன பசு ஒன்றை உருவாக்கி, அதன் வயிற்றுப் பகுதியில் நான்கு நாட்கள் தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பசுவை ஒரு அந்தணருக்கு தானமாக வழங்கி, அவர் அதை விற்றுப் பெற்ற பொருளால் இக்கோவில் கட்டப்பட்டது. இதனால் இத்தலம் “திருசெம்பொன் செய்” எனப் பெயர் பெற்றது.

சிவபெருமான் தாண்டவம் ஆடிய பின்விளைவாக, உலக அமைதிக்காக மகாவிஷ்ணு 11 ரூபங்களில் காட்சி தந்து, திருநாங்கூரின் 11 திவ்யதேசங்களில் தங்கியதாக கூறப்படுகிறது. அவற்றில் திருசெம்பொன் செய் பெருமாள் கோவில் முக்கிய இடம் பெறுகிறது.

கோயிலின் அமைப்பு

மூலவர் : பேரருளாளன் (கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்)

உற்சவ மூர்த்தி : ஹேமரங்கர் அல்லது செம்பொன் ரங்கர்

தாயார் : அல்லிமாமலர் நாச்சியார்

கருவறைக்கு எதிரில் : கருட மண்டபம்

உற்சவங்கள் நடைபெறும் தனி மண்டபம் அருகில் அமைந்துள்ளது.

திராவிடக் கட்டிடக் கலையில் சிறிய அளவில் ஆனாலும் சீரிய வடிவமைப்புடன் அமைந்துள்ள இக்கோவிலில், அல்லிமாமலர் நாச்சியார், பூதேவியுடன் சேர்ந்து பெருமாள் அருள்பாலிக்கிறார். எப்போதும் பக்தர்களைக் காப்பவர் என்பதால் ‘பேரருளாளர்’ எனப் பெயர் பெற்றார். வறுமை, பொருளாதார சிக்கல்கள் நீங்கும் என நம்பி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

வேண்டுதல் நிறைவேறியபின், பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம், புதிய வஸ்திரம் அர்ப்பணிக்கும் வழக்கம் உண்டு. திருசெம்பொன் செய் பெருமாள் கோவில், ஆன்மிக மரபின் உயிரோட்டத்தை நிலைநிறுத்தும் ஒரு புனிதத் தலம் மட்டுமல்ல, பக்தர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் செழிப்பையும் விதைக்கும் தெய்வீக அரணாகும்.

Read more: கருட புராணத்தின் படி மரணத்திற்கு முன் தோன்றும் அறிகுறிகள் என்னென்ன..?

English Summary

Thiruchempon Sei Perumal Temple, which fulfills wishes..! Do you know where it is..?

Next Post

கிருஷ்ண ஜெயந்தி நாளில் சிறப்பு யோகம்: கிருஷ்ணரின் அருளால் பெரும் அதிர்ஷ்டத்தை பெறப் போகும் 4 ராசிகள்!

Sat Aug 16 , 2025
இந்த முறை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு அரிய அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த நாளில் கிரகங்களின் சிறப்பு நிலைகள் மற்றும் சுப சேர்க்கைகள் நான்கு முக்கிய ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். ரிஷபம்: இந்த கிருஷ்ண ஜெயந்தி இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதக பலன்களை கொடுக்கும்.. உங்கள் ராசியின் அதிபதியான சுக்கிரன் சாதகமான நிலையில் இருப்பதால், உங்கள் நிதி நிலைமை கணிசமாக மேம்படும். புதிய மூலங்களிலிருந்து […]
krishanashtami

You May Like