ராணிப்பேட்டை முத்துக்கடையில் விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் மக்கள் எழுச்சி பேரணியின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து அவர் பேசியதாவது: ஆளும் பாஜக அரசாங்கம் மதம் வேண்டும் என செயல்படுகிறது.
மதம் மக்களுக்கானது. அரசாங்கத்திற்கு ஆனது இல்லை என அம்பேத்கர் எழுதிய சட்டத்தில் உள்ளது. மதத்தின் மீது பற்றுள்ள மகாத்மா காந்தியே அம்பேத்கரின் கருத்தை ஏற்றுக்கொண்டார். காங்கிரசோடு நமக்கு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியோடு இருக்கிறோம்.
சனாதனத்தை விமர்சிப்பது இந்து மக்களுக்கு எதிரானது இல்லை. கருத்தியலுக்கு எதிரானது. உதயநிதி பேசியதும் சரி, நானும் இதே கருத்தையே சொன்னேன். ஆனால் அவர் பேசியதற்கே மட்டும் எதிர்ப்பு! ஏன் இந்த இரட்டைப் கோட்பாடு?. 10 கட்சிகள் சேர்ந்து உருவாக்கியதுதான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. ஆர்எஸ்எஸ்ஐ எதிர்க்க கொள்கை உள்ள நாங்கள் உடன் இருக்கிறோம். தேசிய அளவில் இது தேவை உள்ளது. நான் 35 ஆண்டுகளாக அரசியல் பொது வாழ்க்கையில் உள்ளேன்.
கலைஞர், ஜெயலலிதா, ராகுல் அனைவரோடும் அரசியல் செய்துள்ளேன். ஆசை காட்டினால் நான் சென்று விடுவேன் என நினைக்கின்றனர். கொள்கை அரசியலில் செயல்படும் கட்சி விசிக. சங்பரிவார் தமிழகத்தில் காலூன்றிவிடக்கூடாது என கவலைபடுகின்ற கட்சி விசிக. அதனால் திமுகவுடன் உறுதியாக நின்று பயணிக்கிறோம். மதச்சார்புக்கு ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நம்முடைய ராஜேந்திர சோழனுடைய திருவாதிரை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வந்துள்ளார்.
அந்த வகையில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், மண்ணின் மைந்தர், இந்த மண்ணுக்கு உரியவன் என்ற முறையிலும் பிரதமர் மோடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். பிரதமருடன் மேடையில் கலந்து கொள்ள உள்ளீர்களே என்ற கேள்விக்கு,‘‘அவர் பிரதமர், நான் எம்பி, அவ்வளவு தான்…’’ என்றார்.
Read more: அதிமுக கூட்டணியில் அமமுக..? அடுத்த நொடியே டிடிவி தினகரன் கொடுத்த ரிப்ளை..!!