திருப்பரங்குன்றம் தீபத்தூணில், தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்குகளில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.. இந்த உத்தரவுகளை எதிர்த்து மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் தரப்பில் மேல் முறையீட்டு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது..
அப்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டனர். தேவஸ்தானமே தீபத்தூணில் பூஜை செய்து இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாமே என்று இரு நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது.. மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. மேலும் இந்த வழக்கு தொடர்பான உத்தரவு விவரங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்..



