மீதமான சாதத்தை முறையாக சூடாக்கி சாப்பிடவில்லை எனில் கல்லீரலுக்கு ஆபத்து ஏற்படும் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தென்னிந்தியாவை பொறுத்த வரை சாதம் என்பது தினசரி உணவாக உள்ளது. சப்பாத்தி, இட்லி, தோசையைவிட சாதாம் சாப்பிடுவதையே பலரும் விரும்புகின்றனர்.. ஆனால் சில நேரங்களில் சாதம் கூட உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும். அரிசி தினசரி உணவில் ஒரு முக்கிய அங்கமாகும். ஆனால் மீதமான சாதத்தை மீண்டும் சூடாக்குவது ஆபத்தானது. அரிசியை தவறாக சேமித்து வைத்தாலோ அல்லது தவறாக சூடாக்கினாலோ, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகலாம், இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
அரிசியில் பேசிலஸ் செரியஸ் பாக்டீரியா உள்ளது, இது அறை வெப்பநிலையில் அதிக நேரம் வைத்திருந்தால் பெருகும். மீண்டும் சூடுபடுத்தும்போது, இந்த பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதில்லை, மாறாக நச்சுப் பொருட்களை வெளியிடுகின்றன என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்..
குளிர்சாதன பெட்டியில் அதிக நேரம் சாதத்தை சேமித்து வைப்பது பாக்டீரியாக்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் அஃப்லாடாக்சின்களை உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது.
சாதத்தை முறையற்ற முறையில் சேமித்து மீண்டும் சூடுபடுத்துவது உணவு விஷத்தின் அபாயத்தை அதிகரிக்கும், இது வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது குமட்டல் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் நச்சுகள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களையும் சேதப்படுத்தும்.
பாதுகாப்பான உணவை உறுதி செய்ய, புதிதாக சமைத்த சாதத்தை சாப்பிடுவது முக்கியம். ஒருவேளை மீதமான சாதத்தை சேமிக்க வேண்டும் என்றால், அதை ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த நீரில் விரைவாக குளிர்விக்கவும், ஒரு மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், 165°F (75°C) வெப்பநிலையில் நன்கு சூடாக்கவும்.
லேசாக சூடாக்கப்பட்ட சாதம் பாக்டீரியாவை அழிக்காது, தொற்று அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், சாதத்தை எப்போதும் நன்கு சூடாக்கவும். நீங்கள் சமைத்த சாத்தை சேமித்து வைத்தால், அதை 24-48 மணி நேரத்திற்குள் உட்கொள்ள வேண்டும் மற்றும் பாக்டீரியா வளர்ச்சியைக் குறைக்க 4°C க்கும் குறைவான வெப்பநிலையில் காற்று புகாத கொள்கலனில் வைக்க வேண்டும்.
Read More : பெண்களுக்கு மாரடைப்பு வருவதை முன்பே எச்சரிக்கும் அறிகுறிகள்.. இதை எப்படி கண்டறிவது..?