தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.. அப்போது பேசிய அவர் கள்ளக்குறிச்சி மாவத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்..
ரிஷி வந்தியத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் ஊராட்சி ஒன்றிய கட்டிடம் கட்டப்படும்..
உளுந்தூர்பேட்டை அரசு கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும்.
உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 50 ஏக்கர் பரப்பளவி. ரூ.10 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
திருக்கோவிலூர் அருகே ரூ.5 கோடி மதிப்பில் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.
கல்வராயன் மலைப்பகுதிக்கு மகளிர் விடியல் பயணத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
கள்ளக்குறிச்சியில் ரூ.120 கோடியில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், குடியிருப்புகள் கட்டப்படும்.
சங்கராபுரம் அருகே துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
சின்னசேலம் வட்டத்தில் ரூ.3.9 கோடி மதிப்பில் புதிய தீயணைப்புத்துறை கட்டிடம் கட்டப்படும்.
தொடர்ந்து பேசிய அவர் “ இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தனிக்காட்டு ராஜா.. அனைத்திலும் தமிழ்நாடு தான் லீடர். இந்தியாவில் அதிக அளவில் ஆலையில் பெண்கள் பணிபுரிவது தமிழ்நாட்டில் மட்டும் தான்.
இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு தான். வேலை, கல்வி, விளையாட்டு, பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் முன்னோடியாக தமிழ்நாடு தனிக்காட்டு ராஜாவாக உள்ளது. சிறந்த பொதுப் போக்குவரத்தைக் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு தான் இருக்கிறது.. 4 ஆண்டுகளில் 4000 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது..
மூச்சுவாங்கும் அளவுக்கு இவ்வளவு மேஜர் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம்.. எந்த துறை எடுத்துக் கொண்டாலும் சாதனைகள்.. ஒன்றிய அரசு வெளியிடும் அறிக்கைகளில் நம்பர் 1 தமிழ்நாடு தான்.
இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? இது எனது ஓபன் சேலஞ்ச்.. தைரியம் இருந்தால் சொல்லுங்க.. 5 % சொல்லுங்க.. 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பாழ்போன தமிழ்நாடு இன்று திராவிட மாடல் அரசின் 4 ஆண்டுகளில் துள்ளி குதித்து எழுந்துள்ளது.. இனி எப்போதுமே ஏறுமுகம்.. ஆனால் இதை எதையுமே பார்க்க மாட்டோம்..
செய்திகளை படிக்க மாட்டோம்.. தமிழ்நாட்டு சாதனைகள் பற்றி வாய் திறக்க மாட்டோம் என்று சிலர் தமிழ்நாட்டில் இருக்கின்றனர்.. நீங்கள் இப்படியே கண்ணை மூடிக்கொண்டு இருங்க.. நாங்கள் அடித்து தூள்கிளப்பி போய்க் கொண்டிருப்போம்.. திராவிட மாடல் அரசின் சாதனைகளின் மகுடமாக 2026 தேர்தல் மக்கள் அளிக்கப் போகும் தீர்ப்பு உங்களுக்கு ரியாலிட்டி செக் ஆக இருக்கும்..” என்று தெரிவித்தார்..
Read More : ஜன.20-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..



