ஊழல் செய்தால் இதுதான் கதி..!! பாரபட்சமே பார்க்க மாட்டோம்..!! அமைச்சர் நிர்மல்குமார் எச்சரிக்கை..!!

Nirmal Kumar 2026

ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “யார் மீதும் பழிவாங்கும் நோக்கில் சும்மா பொய்யான வழக்குகளை பதிவு செய்ய முடியாது. போதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே புலனாய்வு அமைப்புகள் வழக்கு பதிவு செய்கின்றன. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு அரசு பணிக்கு பணம் வாங்கி ஆள் சேர்த்த விவகாரத்தில் ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

முறைகேடுகள் மற்றும் கூட்டு சதி தொடர்பாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இரண்டு முறை ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது; இது குறித்து அவர்கள்தான் முழு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “மின்வாரியத்தில் 45 டெண்டர்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த முறைகேடுகள் எந்த காலகட்டத்தில் நடந்தன என்பதை தெளிவாக கண்டறிந்து நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அரசுக்கு உரிய வலுவான ஆதாரங்கள் இருக்கும்போது வழக்குகளில் இருந்து யாரும் தப்ப முடியாது. மக்களின் வரிப்பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருந்தால், உரிய ஆதாரங்களின் அடிப்படையில் பாரபட்சமின்றி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Read More : இனி தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நிறுத்தினால் நடவடிக்கை பாயும்..!! ரூ.50,000 வரை அபராதம்..!! மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!!

Next Post

“எனக்கு அவன்தான் வேணும்!”… நீதிமன்றம் சென்ற மகள்; நேரில் சென்று தாய் செய்த காரியம்!

Sun Sep 6 , 2026
நீதிமன்றத்தில் திருமணப் பதிவு நடைபெறவிருந்த நேரத்தில் மகளை மீட்க தாய் நேரடியாக களமிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த இளைஞர் ஒருவர், வீட்டின் உரிமையாளரின் மகளுடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அவரை அழைத்துச் சென்று நீதிமன்றத் திருமணம் செய்ய முயன்றதாக பெண்ணின் பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது. மகள் திடீரென வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்த பெற்றோர், அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது […]
06e2d8e72c41b599b944e60c870bcabc1a6e3173c375b4942e2818db3e343f9a

You May Like