’என் குழந்தைக்கு இவர் தான் அப்பா’..!! சஸ்பென்ஸை உடைத்தை இலியானா..!! அவரே வெளியிட்ட புகைப்படம்..!!

நடிகை இலியானா தனது கர்ப்பத்துக்கு காரணமானவரை வைத்து புதிர் போட்டி நடத்தி வருவதாகவே தெரிகிறது. முதலில் ஒரு டிசர்ட் ஒன்றை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். அதன் பின்னர், தனது பேபி பம்ப் போட்டோவை வெளியிட்டு கர்ப்பத்துக்கு யார் காரணம் கண்டுபிடிங்க என்பது போல வேடிக்கை காட்டினார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தனது பார்ட்னரின் பிளர் புகைப்படத்தை வெளியிட்டு வெறுப்பேற்றிய இலியானா, ஒரு வழியாக தனது கர்ப்பத்துக்கு காரணமானவரின் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

’என் குழந்தைக்கு இவர் தான் அப்பா’..!! சஸ்பென்ஸை உடைத்தை இலியானா..!! அவரே வெளியிட்ட புகைப்படம்..!!

நடிகை இலியானா கடந்த 2018ஆம் ஆண்டு வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் ஒருவரை காதலித்து அவருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இலியானாவும் அந்த போட்டோகிராபர் ஆண்ட்ரூ நீபோனும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. பின்னர் இருவரும் சில மாதங்களிலேயே பிரேக்கப் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மற்றொரு வெளிநாட்டினர் உடன் நடிகை இலியானா காதல் வலையில் விழுந்து கர்ப்பமும் ஆகியிருக்கிறார்.

நடிகை இலியானா சமீபத்தில் தனது பார்ட்னருடன் எடுத்த போட்டோவை வெளியிட்டிருந்தார். ஆனால், அதில், அவருடைய முகம் பிளர் செய்யப்பட்டு இருந்தது. ஏதாவது பெரிய பாலிவுட் நடிகரா? என பல கேள்விகள் வெடித்தது. தற்போது டேட் நைட் என்கிற கேப்ஷன் உடன் தனது குழந்தைக்கு காரணமானவரின் முழு உருவத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார் இலியானா. ஆனால், அதிலும் ஒரு ட்விஸ்ட்டாக அந்த நபரின் பெயரை இலியானா சொல்லவில்லை. விரைவில் தனது பார்ட்னரின் பெயரை இன்னொரு போஸ்ட் மூலம் இலியானா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த போட்டோவில் உள்ள நபர் யார் என்பது குறித்த தேடுதல் வேட்டையும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

CHELLA

Next Post

பிக்பாஸ் பெயரை கேட்டாலே தலைதெறிக்க ஓடும் நடிகர், நடிகைகள்..!! யாருமே கிடைக்கலையாம்..? ஏன் தெரியுமா..?

Mon Jul 17 , 2023
தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக பிக்பாஸ் உள்ளது. இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில், விரைவில் 7-ஆவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் எளிதில் பிரபலமாகி விடுவர். அதோடு சேர்த்து பல சர்ச்சைகளிலும் சிக்கி விடுவார்கள். அந்தவகையில், பிக்பாஸ் பிரபலமாக திகழ்ந்து வந்த மீரா மிதுன் வெளியே வந்தும் நடிகர்கள் […]
Bigg Boss Kamal

You May Like